அம்பிகாவை பாய்ந்து பாய்ந்து அடித்த வக்கீல்.. கோர்ட்டுக்குள் நடந்த களேபரம்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    கோர்ட் வளாகத்தில் பெண்ணை தாக்கிய வழக்கறிஞர்-வீடியோ

    விழுப்புரம்: கேஸ் ஒன்றிற்காக கோர்ட்டுக்கு வந்த அம்பிகா என்ற இளம்பெண்ணை எகிறி எகிறி அடித்துள்ளார் ஒரு வக்கீல்.. இது சம்பந்தமான வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

    மயிலம் அருகே உள்ள அவ்வையார் குப்பத்தைச் சேர்ந்தவர் அம்பிகா. திருமணமான இவர் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து கோரியுள்ளார்.

    Advocate attacks the young woman in the Court Campus

    இதற்காக வக்கீல் தனஞ்செழியன் என்பவர்தான் இந்த வழக்கை நடத்தி வருகிறார். ஆனால் விவாகரத்து வழக்கை ரெண்டு தரப்பு வக்கீல்களும் தன்னிச்சையாக நிறுத்தியதாக சொல்லப்படுகிறது.

    இதை பற்றி தன் வக்கீலிடம் கேட்க, நேற்று கோர்ட்டுக்கு அம்பிகா வந்திருந்தார். அப்போது இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த அம்பிகா, வழக்கறிஞரிடம் ஆவேசமாக கேள்வி எழுப்பியவாறே இருந்தார்.

    ஜாலி பண்ணனுமா வாங்க.. கூப்பிட்ட லாட்ஜ்.. பூட்டு போட்டு ஜோலியை முடித்த அதிகாரிகள்!

    இதைபார்த்து ஆத்திரமடைந்த வக்கீல் தனஞ்செழியன், ஓடிச்சென்று, அம்பிகாவை தாக்கினார். அப்போது அம்பிகா வக்கீலை கோபத்தில் திட்ட, வக்கீலோ பாய்ந்து பாய்ந்து அம்பிகாவை சரமாரியாக தாக்கினார்.

    இவ்வளவும் விழுப்புரம் கோர்ட் வளாகத்திலேயே நடந்தது... சுற்றி நின்றவர்கள் யாராலும் வக்கீலை தடுத்து நிறுத்த முடியவில்லை. தாக்குதலில் காயமடைந்த அம்பிகா, விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+