விழுப்புரத்தில் ரூ.9.75 கோடி பணம் கையாடல்.. “கம்பி” நீட்டிய அதிமுக நிர்வாகி.. போலீஸ் வலைவீச்சு!
Subscribe to Oneindia Tamil
விழுப்புரம்: விழுப்புரம் நகராட்சி ஊழியர்களின் சேமநலநிதி ரூ.9.75 கோடி பணத்தை கையாடல் செய்த விவகாரத்தில் அதிமுக நிர்வாகி வினீத் மீது விழுப்புரம் எஸ்.பி அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தலைமறைவான வினீத்தை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
விழுப்புரம் நகராட்சி ஆணையர் வீரமுத்துகுமார் அளித்த புகாரின் அடிப்படையில் விழுப்புரம் மாவட்ட குற்றப் பிரிவு போலீசார் தலைமறைவான அதிமுக நிர்வாகி வினீத்தை வலைவீசி தேடி வருகின்றனர். வினீத்தின் இந்த முறைகேட்டுக்கு பின்னணியில் வேறு யாரெல்லாம் இருக்கிறார்கள் என்ற விசாரணையையும் போலீசார் முடுக்கிவிட்டுள்ளனர்.













Click it and Unblock the Notifications