உதயசூரியனுக்கு விழுந்த இலைக்கட்சி ஓட்டுகள்.. ரிசல்ட்ல கன்ஃபார்ம் ஆகிடுச்சு.. சொல்வது திருமாவளவன்!
விழுப்புரம்: இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களித்தே பழக்கப்பட்ட அதிமுகவினரும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் உதயசூரியனுக்கு வாக்களித்துள்ளனர் எனத் தெரிவித்துள்ளார் விசிக தலைவர் திருமாவளவன்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்த நா.புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி உடல் நலக் குறைவால் மரணம் அடைந்தார். இதனைத் தொடர்ந்து, விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 14 ஆம் தேதி துவங்கியது. 64 பேர் வேட்பு மனு தாக்கல் செய்த நிலையில் 35 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு, 29 வேட்பாளர்கள் தகுதி பெற்றனர்.

திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாமக சார்பில் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா ஆகியோர் போட்டியிட்டனர். அதிமுக இந்த இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தது. இத்தேர்தலில் போட்டியிடவில்லை என அதிமுக ஒதுங்கிக் கொண்ட நிலையில், திமுக, பாமக, நாம் தமிழர் கட்சி என மும்முனை போட்டி நிலவியது.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 82.48 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. மொத்தமுள்ள 2 லட்சத்து 37 ஆயிரத்து 031 வாக்காளர்களில், 99 ஆயிரத்து 944 பெண் வாக்காளர்கள் உட்பட 1 லட்சத்து 95 ஆயிரத்து 495 வாக்காளர்கள் வாக்களித்தனர். அதிமுக தேர்தல் புறக்கணிப்பு என்று அறிவித்த நிலையில் வாக்குப்பதிவு அதிகரித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
அதிமுக ஓட்டு யார் பக்கம்?: அதிமுக வாக்குகள் யார் பக்கம் சென்றிருக்கும் என பெரிய கேள்வி எழுந்த நிலையில் அதற்கு இன்று விடை கிடைத்துள்ளது. ஜெயலலிதா படத்தை வைத்து ஓட்டு கேட்ட பாமகவுக்கோ, நேரடியாக ஆதரவு கேட்ட சீமானுக்கோ, நோட்டாவுக்கோ வாக்களிக்காமல் அதிமுகவினர் பெரும்பாலும் திமுகவுக்கே வாக்களித்துள்ளது இன்றைய வாக்கு எண்ணிக்கை நிலவரத்தின் மூலம் தெரியவருகிறது.
இன்று காலை 8 மணி முதல் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. அதன்படி 8 சுற்றுகள் முடிவில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 57,393 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார். பாமக வேட்பாளர் அன்புமணி 24,130 வாக்குகளை பெற்றுள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா 4,704 வாக்குகள் பெற்றுள்ளார். 33 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறது திமுக.
திருமாவளவன் பேட்டி: இந்நிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவுகள் குறித்து தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு திருமாவளவன் பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசியுள்ள அவர், "விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் மாபெரும் வெற்றியைப் பெறுவார் என்பது கணிக்கப்பட்ட ஒன்றுதான். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவைச் சார்ந்தவர்களும் திமுகவுக்கு வாக்களித்துள்ளனர் என்பது தெளிவாகிறது.
அதிமுக வாக்குகள் பாமகவுக்கோ, வேறு வேட்பாளர்களுக்கோ செல்லும் என பலரும் கூறினர். ஆனால், இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களித்தே பழக்கப்பட்ட அதிமுகவினரும் இந்த முறை உதயசூரியனுக்கு வாக்களித்துள்ளனர் என்பதை இந்த முடிவு நமக்கு உணர்த்துகிறது." எனத் தெரிவித்துள்ளார்.
எடுபடல: மேலும் பேசிய திருமாவளவன், "3 ஆண்டுகால திமுக ஆட்சிக்கு மக்கள் அளித்துள்ள நற்சான்று இது. தமிழ்நாட்டில் திமுக கூட்டணிக்கு செல்வாக்கு நீடிக்கிறது என்பதற்கு இந்த இடைத்தேர்தல் முடிவுகளே சான்று. எதிர்க்கட்சிகளின் எதிர்மறையான விமர்சனம் மக்களிடம் எடுபடவில்லை" எனத் தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications