நீண்ட வரிசையில் நின்று மது வாங்கிய முதியவர்.. வெயிலால் சுருண்டு விழுந்து பலி.. விழுப்புரத்தில் சோகம்
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே டாஸ்மாக் கடையில் நீண்ட வரிசையில் நின்று மது வாங்கிய முதியவர், வெயிலுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளைத் தவிர்த்து, மற்ற பகுதிகளில், டாஸ்மாக் மதுபானக் கடைகள் நேற்று திறக்கப்பட்டன. இதேபோல் ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 224 கடைகளில், விழுப்புரம் பகுதியில் 84 கடைகள், கள்ளக்குறிச்சி பகுதியில் 70 கடைகள் உட்பட 154 டாஸ்மாக் கடைகள் நேற்று திறக்கப்பட்டன.


இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள பஞ்சாலம் கிராமத்தில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையில் மது வாங்குவதற்காக ஏராளமான குடிகாரர்கள் குவிந்தனர். முதலில் டோக்கனை பெற்றுகொண்ட குடிகாரர்கள் மது வாங்குவதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அந்த சமயத்தில் வெயில் சுட்டெரித்தது. அதையும் பொருட்படுத்தாமல் மதுவாங்கும் ஆர்வத்தில் பலர் நின்றனர். அப்போது 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவரும் கொளுத்திய வெயிலிலும் வரிசையில் நின்று மதுபாட்டில்களை வாங்கி கொண்டு வந்தார்.


இதனிடையே அவர் சிறிது நேரத்திலேயே சுருண்டு விழுந்து இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த ஒலக்கூர் காவல்நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, முதியவரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் திண்டிவனம் தீர்த்தகுளம் மூங்கில் அம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த சுப்பிரமணி (65) என்பதும், வெயிலுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல், அவர் சுருண்டு விழுந்து இறந்ததும் தெரியவந்தது.

-
டாஸ்மாக் கடையை மூட மறுக்கும் விஜய் அரசு.. களத்தில் குதித்த தூத்துக்குடி மக்கள்! ரொம்ப தப்புங்க! -
கஜானாவுக்கு வரும் 1200 கோடி.. பார்ட்டி ஃபண்டில் கைவைத்த விஜய்! இனி டாஸ்மாக் கல்லா கட்டுமே! சூப்பர்! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்?












Click it and Unblock the Notifications