விழுப்புரம் அரசூர் மக்கள் மறியல் போராட்டம் வாபஸ்! சென்னை- திருச்சி சாலையில் சீரான போக்குவரத்து
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் அரசூர், இருவேல்பட்டு உள்ளிட்ட கிராம மக்கள் உணவு, தண்ணீர் கேட்டு திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 2 மணி நேரத்திற்கும் மேலாக போராட்டம் நடத்தி வந்த நிலையில் தற்போது மறியல் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து சீராகி வருகிறது.
பெஞ்சல் புயலானது கடந்த சனிக்கிழமை கரையை கடந்த போது வடதமிழகத்தை பதம்பார்த்துவிட்டு சென்றது.எந்த நேரத்தில் அதற்கு பெஞ்சல் என பெயரிடப்பட்டதோ மழை பெய்தே மக்களை இன்னலுக்குள்ளாக்கிவிட்டது.

வடதமிழகத்தில் பெய்த மழையால் நீர் நிலைகள் நிரம்பியும் உடைத்துக் கொண்டும் ஊருக்குள் வந்துவிட்டது.
இந்த நிலையில் தென்பெண்ணை ஆற்றில் கரைபுரண்ட வெள்ளத்தால் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அரசூர், இருவேல்பட்டு உள்ளிட்ட கிராமங்கள் பாதிக்கப்பட்டன. 2 நாட்களாகியும் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் செய்யப்படவில்லை.
இதனால் தங்களுக்கு உணவு, குடிநீர் வழங்குமாறு போராட்டம் நடத்தி வந்தனர். இதனால் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பல கி.மீ. நீளத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதுகுறித்து தகவலறிந்த கோட்டாட்சியர் சார்பில் மாவட்ட நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்கள் மறியலை கைவிடவில்லை.
இதையடுத்து சிறிது நேரம் கழித்து ஆட்சியர் பழனி, மாவட்ட எஸ்பி ஆகியோர் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தருவதாக ஆட்சியர் பழனி உறுதியளித்தார். இதனால் மறியலை கைவிட மக்கள் ஒப்புக் கொண்டனர்.
ஏற்கெனவே வெள்ளத்தால் கடலூர்- சென்னை தேசிய நெடுஞ்சாலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை- திருச்சி நெடுஞ்சாலையில் விக்கிரவாண்டியில் மோசமான வெள்ளத்தால் வாகனங்கள் திருக்கோவிலூர், திருவண்ணாமலை, திண்டிவனம் மார்க்கத்தில் மாற்று பாதையில் திருப்பிவிடப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த மறியலால் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications