விழுப்புரம் விரைந்தார் ஸ்டாலின்.. கள்ளசாராயத்தால் பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு.. நேரில் முதல்வர் ஆறுதல்
விழுப்புரம்: மரக்காணம் பகுதி அருகே விற்கப்பட்ட கள்ளச்சாராயத்தை குடித்த 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியான நிலையில், மேலும் 5 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இதில் பாதிக்கப்பட்டவர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் எக்கியார்குப்பம் கடற்கரை ஓரம் வாம்பாமேடு எனும் இடத்தில் சிலர் காவல்துறையினருக்கு தெரியாமல் கள்ளச்சாராயம் காய்ச்சி வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று இந்த இடத்திற்கு சாராயம் குடிக்க வந்த சங்கர் (50), தரணிவேல் (50), மண்ணாங்கட்டி (47), சந்திரன் (65), சுரேஷ் (65). மற்றொரு மண்ணாங்கட்டி (55) இதில் சம்பவ இடத்திலேயே தெய்வமணி, செந்தமிழன், கிருத்திகை வாசன், ரமேஷ் மற்றும் ராஜமூர்த்தி ஆகியோர் கள்ளச்சாராயம் குடித்துள்ளனர்.

இதில் இதில் சம்பவ இடத்திலேயே தெய்வமணி, செந்தமிழன், கிருத்திகை வாசன், ரமேஷ், ராஜமூர்த்தி ஆகியோர் சம்பவ இடத்திலேயே மயங்கி விழ, சங்கர் (50), தரணிவேல் (50), மண்ணாங்கட்டி (47), சந்திரன் (65), சுரேஷ் (65). மற்றொரு மண்ணாங்கட்டி (55) ஆகியோர் தங்கள் வீட்டில் மயங்கி விழுந்துள்ளனர். இதனையடுத்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் உடனடியாக அவர்களை புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதில் 3 பேர் இறந்துவிட, கள்ளச்சாராயம் காய்ச்சிய இடத்தில் மயங்கி விழுந்தவர்களில் 3 பேர் அதே இடத்தில் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து சம்பவம் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. பின்னர் அவர்கள் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவத்தில் நேற்று வரை 6 பேர் உயிரிழந்த நிலையில் இன்று மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இன்று மதியம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழுப்புரம் வந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார். அதேபோல விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாதிக்கப்பட்டவர்களையும் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் "தமிழக அரசு மதுவை ஊக்குவிப்பதாகவும் எனவே இந்த உயிரிழப்புகளுக்கு பொறுப்பேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் துறை சார்ந்த அமைச்சர் செந்தில் பாலாஜி என இருவரும் பதவி விலக வேண்டும்" என்றும் வலியுறுத்தியுள்ளார். இந்த சம்பவத்தையடுத்து தற்போது 3 சாராய வியாபாரிகளை தனிப்படை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications