விழுப்புரத்தில் 21 சமூக நீதிப் போராளிகள் மணிமண்டபத்தை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்!

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: விழுப்புரம் வழுதரெட்டியில் தமிழக அரசால் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஏ.கோவிந்தசாமி நினைவு அரங்கம், 21 சமூகநீதி போராளிகளின் மணிமண்டபத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்துள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை விழுப்புரம் வந்தார். அவருக்கு திமுக தொண்டர்களும் பொதுமக்களும் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் மாவட்ட எல்லை கிராமமான ஒலக்கூரில் உள்ள வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு செய்தார்.

mk stalin villupuram reservation

இன்று காலை மக்கள் புடைசூழ வழுதரெட்டி பகுதிக்குச் சென்றார் முதல்வர் ஸ்டாலின். விழுப்புரம் நகராட்சிக்கு உட்பட்ட வழுதரெட்டியில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஏ.கோவிந்தசாமி நினைவரங்கம் மற்றும் சமூகநீதி போராளிகளின் மணிமண்டபத்தை திறந்து வைத்து நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறார்.

அண்ணா, கருணாநிதி அரசில் அமைச்சராகப் பணியாற்றிய முன்னாள் அமைச்சர் ஏ.கோவிந்தசாமி அவர்களின் பெருமையை நினைவுகூரும் வகையில் விழுப்புரம் மாவட்டம், வழுதரெட்டி கிராமத்தில் ரூபாய் 4 கோடி மதிப்பீட்டில் ஏ.கோவிந்தசாமி நினைவு அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

mk stalin villupuram reservation

தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20% தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி நடத்தப்பட்ட சாலை மறியல் போராட்டத்தின் போது அன்றைய ஆட்சியில் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட 21 தியாகிகளின் நினைவாக விழுப்புரத்தில் அமைக்கப்பட்டுள்ள சமூகநீதிப் போராளிகள் மணிமண்டபத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்துள்ளார்.

பாப்பனப்பட்டு ரெங்கநாதக் கவுண்டர், சித்தணி ஏழுமலை, ஒரத்தூர் ஜெகநாதன், முண்டியம்பாக்கம் சிங்காரவேலு, கயத்தூர் முனியன், கயத்தூர் முத்து, கோலியனூர் கோவிந்தன், கோலியனூர் விநாயகம், சிறுதொண்டமாதேவி தேசிங்கு, தொடர்ந்தனூர் வேலு, கயத்தூர் தாண்டவராயன், பார்ப்பனப்பட்டு வீரப்பன், பேரங்கியூர் அண்ணாமலைக் கவுண்டர், அமர்த்தானூர் மயில்சாமி, குருவிமலை முனுசாமி நாயகர், சிவதாபுரம் குப்புசாமி, கொழப்பலூர் முனுசாமி கவுண்டர், வெளியம்பாக்கம் இராமகிருஷ்ணன், மொசரவாக்கம் கோவிந்தராஜ் நாயகர், கடமலைப்புத்தூர் மணி, புலவனூர் ஜெயவேல் பத்தர் ஆகிய 21 பேரின் நினைவாக மணி மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+