விழுப்புரம் டூ பெங்களூர் பஸ்.. கடலை எண்ணை கொண்டுவந்த பயணியை இறக்கிவிட்ட நடத்துநர்! கோர்ட் வச்ச ஆப்பு
விழுப்புரம்: கர்நாடக அரசு பஸ்ஸில் கடலை எண்ணெய்யை ஏற்ற அனுமதி இல்லை என்று கூறி பயணியை பாதி வழியில் இறக்கிவிட்ட சம்பவம் பேசு பொருளாகியிருந்தது. இந்நிலையில் இது தொடர்பான வழக்கில் கர்நாடக அரசு பேருந்து போக்குவரத்து கழகத்திற்கு (கேஎஸ்ஆர்டிசி) ரூ.1 லட்சத்தை அபராதமாக நுகர்வோர் நீதிமன்றம் விதித்திருக்கிறது.
விழுப்புரத்திலிருந்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் 2ம் தேதி தெய்வசிகாமணி என்பவர் தனது மனைவி மற்றும் மகள்களுடன் பெங்களூருக்கு கேஎஸ்ஆர்டிசி பேருந்தில் ஏறியிருக்கிறார். இதற்காக அவர் ஆன்லைனில் டிக்கெட்டை புக் செய்திருக்கிறார். இவர் தனது தாய் கொடுத்த 15 லிட்டர் கடலை எண்ணெய்யையும் உடன் கொண்டு சென்றிருக்கிறார். பஸ் ஏறும் போது நடத்துநர் இதை கவனித்துவிட்டு, சீட்டுக்கு அடியில் வைத்துக்கொள்ளுங்கள் என்று சொல்லியிருக்கிறார்.

பஸ் புறப்பட்ட கொஞ்ச நேரத்தில் தெய்வசிகாமணியிடம் வந்து, "நீங்கள் வைத்திருக்கும் லக்கேஜூக்கு ரூ.200 கொடுக்க வேண்டும்" என்று கேட்டிருக்கிறார். ஆனால், தெய்வசிகாமணி "வழக்கமாக இப்படி நாங்கள் கொண்டு சென்றிருக்கிறோம். இதுவரை லக்கேஜ் கட்டணம் கேட்டதில்லை. ரூ.50 வேண்டுமானால் தருகிறேன்" என கூறியுள்ளார். இதனை நடத்துநர் ஏற்கவில்லை. வாக்குவாதம் வெடித்திருக்கிறது.
பஸ்ஸில் எந்த எண்ணெய்யும் கொண்டு செல்ல அனுமதி கிடையாது. எனவே, இதற்கான தொகையை கொடுக்க வேண்டும் அல்லது பஸ்ஸை விட்டு இறங்க வேண்டும் என்று நடத்துநர் கேட்க, தெய்வசிகாமணி உறுதியாக மறுத்திருக்கிறார். ஒரு கட்டத்தில் பஸ், கண்டாச்சிபுரம் காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. பஞ்சாயத்தை கேட்ட போலீசார், "கடலை எண்ணெய் உடனே தீப்பற்றாது. எனவே ஆபத்தில்லை. தெய்வசிகாமணியை பேருந்தில் பயணிக்க அனுமதியுங்கள்" என நடத்துநருக்கு அறிவுறுத்தி உள்ளனர்.
கடுப்பான நடத்துநர் தனது உயரதிகாரிக்கு ஃபோன் செய்திருக்கிறார். அங்கு விஷயத்தை சொல்லவும், எந்த எண்ணெய்யையும் பஸ்ஸில் ஏற்ற வேண்டாம் என அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள். எனவே நடத்துநர் கறாராக தெய்வசிகாமணியை பஸ்ஸில் ஏற அனுமதிக்கவில்லை. இதனையடுத்து தனது மனைவியையும், மகளையும் மட்டும் அதே பஸ்ஸில் அனுப்பிவிட்டு, டாக்ஸி பிடித்து திருவண்ணாமலை வந்து அங்கிருந்து வேறு ஒரு பஸ் பிடித்து சீட் கிடைக்காமல் இரவு முழுவதும் நின்றுகொண்டே பெங்களூர் சென்றிருக்கிறார் தெய்வசிகாமணி.
இந்த சம்பவம் தொடர்பாக விழுப்புரம் மாவட்ட நுகர்வேர் நீதிமன்றத்தை தெய்வ சிகாமணி அணுகியுள்ளார். வழக்கு விசாரணைக்கு வந்திருக்கிறது. விசாரணையில் தெய்வசிகாமணியை பாதியில் இறக்கிவிட்டதை நடத்துநர் ஒப்புக்கொண்டார்.
இதனையடுத்து நீதிமன்றம் இரண்டு கேள்விகளை கேட்டது. ஒன்று கர்நாடக போக்குவரத்து கழகத்தின் பேருந்துகளில் கடலை எண்ணெய்யை எடுத்து செல்ல தடை உண்டா? இரண்டாவதாக கர்நாடக போக்குவரத்து கழகத்தின் சேவை மோசமானதாக இருக்கிறதா? என்று கேட்டது.
நீதிமன்றத்தின் கேள்விக்கு பதிலளித்த போக்குவரத்து கழகம், தங்கள் பட்டியலில் கடலை எண்ணெய் தடை செய்யப்பட்டிருக்கிறது என்று கூறியது. ஆனால், பயணி தெய்வசிகாமணி, இதற்கு மறுப்பு தெரிவித்து கர்நாடக போக்குவரத்து கழகத்தின் சார்பில் பேருந்தில் எடுத்துச் செல்ல தடை செயய்யப்பட்ட பொருட்களின் பட்டியலை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். அதில் கடலை எண்ணெய் குறிப்பிடப்படவில்லை.
இதனையடுத்து பயணியை பாதியில் இறக்கிவிட்டதற்காகவும், மோசமான சேவைக்காகவும் ரூ.1 லட்சம் அபராதமாக விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. அதேபோல, தெய்வசிகாமணியின் பஸ் டிக்கெட் தொகையான ரூ.660-ஐ திருப்பி தரவும் உத்தரவிட்டுள்ளது.
இந்த சம்பவத்தின் மூலம், கடலை எண்ணெய் எளிதில் தீப்பிடிக்கும் பொருள் இல்லை என்பதையும் கேஎஸ்ஆர்டிசி கழக லக்கேஜ் விதிமுறை லிஸ்ட்டில் கடலை எண்ணெய் கொண்டு செல்ல தடை விதிக்கப்படவில்லை என்பதையும் நிரூபித்து, தன்னை பாதி வழியில் இறக்கி விட்ட நடத்துநருக்கு பாடம் கற்பித்துள்ளார் தெய்வசிகாமணி.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications