விஜயின் அரசியல் பயணம்.. பவன் கல்யாண் என்ன சொல்லியிருக்காருனு பாருங்க

Subscribe to Oneindia Tamil

விக்கிரவாண்டி: நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு நேற்று நிறைவடைந்துள்ள நிலையில் பலரும் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஆந்திர துணை முதல்வரான பவன் கல்யாணும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் அரசியல் மாநாடு, விக்கிரவாண்டியில் நேற்று நடைபெற்றது. இதற்காக தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான ரசிகர்களும், தொண்டர்களும் மாநாட்டு திடலில் குவிந்து விஜயின் பேச்சைக் கேட்டனர். விஜயின் அரசியல் வருகை நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது.

tvk manadu tamilaga vetri kazhagam actor vijay

மாநாட்டு மேடைக்கு தவெக தலைவர் நடிகர் விஜய் வருகை புரிந்ததும் தளபதி தளபதி என்று லட்சக்கணக்கான தொண்டர்கள், ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். கட்சி நிர்வாகிகள் விஜய்க்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். தொடர்ந்து, மாநாட்டு மேடை அருகே அமைக்கப்பட்டிருந்த ரேம்ப் வாக் பாதையில் சென்று தொண்டர்கள் மத்தியில் வணக்கம் செலுத்தினார்.

ரேம்ப் வாக்கில் விஜய் நடந்து வந்து கொண்டிருந்தபோதே தொண்டர்கள் கட்சி கொடி துண்டுகளை நடிகர் விஜயை நோக்கி வீசத் தொடங்கினர். ஒவ்வொரு துண்டையும் எடுத்து தனது தோளில் போட்டுக் கொண்டபடி சிரித்த முகத்துடன் விஜய் சென்றார். கீழே விழுந்த துண்டை எடுத்து கழுத்தில் அணிந்து கொண்டே ரேம்பில் சென்றார்.

தொடர்ந்து விஜய் மேடைக்குச் சென்றவுடன், வெற்றிக் கழகத்தின் பாடல் ஒளிபரப்பப்பட்டது. பாடல் ஒலிக்க ஒலிக்க ரசிகர்களின் ஆரவாரத்துக்கு மத்தியில் கண்கலங்கியபடி விஜய் நின்றார். தொடர்ந்து, சேர, சோழ, பாண்டிய மன்னர்கள், விடுதலைப் போராட்ட தியாகிகள், மொழிப்போர் தியாகிகளுக்கு மரியாதை செலுத்தினார். பின்னர், ரிமோட் கண்ட்ரோல் மூலமாக தவெக கொடியை 100 அடி கம்பத்தில் ஏற்றினார்.

தமிழ்த்தாய் வாழ்த்துடன் மாநாடு தொடங்கியது. தவெகவின் உறுதி மொழியை பொருளாளர் வெங்கட்ராமன் வாசிக்க தொண்டர்கள் அனைவரும் அதனை எழுந்து நின்று வாசித்தனர். மாநாட்டில் இருக்கும் கூட்டத்தைப் பார்த்த விஜய் உற்சாகமடைந்தார். முன்னதாக இந்த மாநாடு பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கியது.

அப்போது கொள்கை பரப்பு பாடல் ஒலிபரப்பு செய்யப்பட்டது. சாதி மாத பாகுபாடு இல்லாத சமுத்துவ சமுதாய கொள்கை, அதாவது மதச்சார்பற்ற சமூக நீதி கொள்கையுடன் உங்களுடன் உழைக்க நான் வருகிறேன் என்று விஜய் அதில் அதிகாரபூர்வமாக தன் கொள்கையை அறிவித்துள்ளார்.

அனல் தெறிக்கும் விஜயின் பேச்சு குறித்து அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் உள்ளிட்டோர் கருத்து மற்றும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஆந்திர மாநிலத்தின் துணை முதலமைச்சர் பவன் கல்யாணும் விஜய்யின் அரசியல் பயணத்திற்கு வாழ்த்துகளை தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "துறவிகளும் சித்தர்களும் அதிகம் வாழ்ந்த தமிழ்நாட்டில் இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கியிருக்கும் விஜய்க்கு என் இதயம் கனிந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+