அண்ணனுக்கு வியர்க்குது.. உதயநிதிக்கு துடைத்து விட்ட திமுக வேட்பாளர்.. வெடித்தது சர்ச்சை!
உதயநிதி ஸ்டாலினுக்கு கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதி வேட்பாளர் கவுதம் சிகாமணி வியர்வையை துடைத்துவிட்டது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கள்ளக்குறிச்சி: உதயநிதி ஸ்டாலினுக்கு கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதி வேட்பாளர் கவுதம் சிகாமணி வியர்வையை துடைத்துவிட்டது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
லோக்சபா தேர்தலில் திமுக மிக தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறது. திமுக தலைவர் ஸ்டாலின் வரிசையாக ஒவ்வொரு மாவட்டமாக சென்று பிரச்சாரம் செய்து வருகிறார்.
அதேபோல் திமுக தலைவர் மு.க ஸ்டாலினின் மகன் நடிகர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்து வருகிறார். வேட்பாளர்களை ஆதரித்து இவர் தீவிரமாக பிரச்சாரம் செய்கிறார்.

என்ன நடந்தது
இந்த நிலையில் நேற்று பொன்முடி மகன் கவுதம் சிகாமணியை ஆதரித்து உதயநிதி பிரச்சாரம் செய்தார். பொன்முடி மகன் கவுதம் சிகாமணி தற்போது கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து உதயநிதி ஆத்தூரில் திறந்த வேனில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
[குமரியில் களமிறங்கும் வசந்தகுமார் எம்எல்ஏ.. அசரவைக்கும் அரசியல் பயோடேட்டா இதுதான்! ]

வியர்வை
திறந்தவெளி வேனில் பிரச்சாரம் செய்த உதயநிதி ஸ்டாலினுக்கு கடும் வியர்வை ஏற்பட்டது. இதைப்பார்த்த கவுதம் சிகாமணி அவருக்கு வியர்வையை துடைத்துவிட்டார். உதயநிதியின் முகத்தை தன்னுடைய துண்டை வைத்து கவுதம் துடைத்துவிட்டார்.

பெரிய வைரல்
இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. இவை பெரிய வைரலாகி உள்ளது. இதனால் உதயநிதிக்கு எதிராக பலர் பேச தொடங்கி இருக்கிறார்கள். உதயநிதி, கவுதமை இப்படி செய்ய விட்டு இருக்க கூடாது, வியர்வையை கூட துடைத்துக் கொள்ள முடியாதா? என்று பலர் கேள்வி இருக்கிறார்கள்.

திமுக
கடந்த சில நாட்களாவே உதயநிதியின் பிரச்சாரம் எல்லாமே கொஞ்சம் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் அழகானவர், அவருக்கு வாக்களிக்க வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் கூறியது பெரிய சர்ச்சை ஆனது குறிப்பிடத்தக்கது.
-
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
ஒதுங்கும் துரைமுருகன்.. திமுகவின் புதிய பொதுச்செயலாளராகிறாரா ஆ.ராசா? உதயநிதி ஸ்டாலினும் ஆதரவாம்! -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம் -
“திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம்.. தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு”.. CPI வீரபாண்டியன் உறுதி! -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
விஜய் VS உதயநிதி VS அண்ணாமலை.. தமிழ்நாடு அரசியலில் புதிய இன்னிங்ஸ்.. யாருக்கு சாதகம் தெரியுமா? -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன?











Click it and Unblock the Notifications