Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

200 வாக்காளருக்கு ஒரு ஆபிஸ்..காலை மாலை டீ-வடை ஃப்ரீ! விக்கிரவாண்டியில் திரும்பும் பக்கமெல்லாம் திமுக

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்கு பதிவுக்கு இன்னும் ஒரு வார கால இடைவெளியே இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக ஆளும்கட்சியான திமுக 200 வாக்காளர்களுக்கு ஒருவர் அலுவலகம் என அமைத்து காலை மாலை என அலுவலகத்திற்கு வரும் வாக்காளர்களுக்கு டீ வடை பஜ்ஜி போண்டா என வழங்கி அசத்தி வருகின்றனர்

தமிழக சட்டமன்றத்திற்கு இடைத்தேர்தல் ஒன்றும் புதிதல்ல.. விக்கிரவாண்டிக்கும் அது புதிதல்ல.. இதுவரை தமிழகம் பல இடைத்தேர்தல்களை சந்தித்திருக்கிறது. பெரும்பாலும் ஆளும் கட்சியே இடைத்தேர்தல்களில் வெற்றி பெறுவது வாடிக்கை.

vikravandi assembly by election 2024 pmk dmk 2024

மாற்றாக 2019ஆம் ஆண்டு 18 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் திமுக பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்றது. இருந்தாலும் ஆட்சியைத் தொடர தேவையான எம்எல்ஏக்கள் கிடைத்ததால் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் ஆக தொடர்ந்தார்.

அதற்கு பிறகு சட்டமன்றத் தேர்தலில் திமுக பெரு வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. அதற்கு பிறகு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்றார். இந்த நிலையில் கடந்த மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது விக்கிரவாண்டி தொகுதி எம்எல்ஏ புகழேந்தி மயங்கி விழுந்து உயிரிழந்தார். அந்த தொகுதிக்கு தற்போது இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

ஆளுங்கட்சியான திமுக முதல் ஆளாக தங்களது வேட்பாளராக அன்னியூர் சிவாவை அறிவித்தது. இதேபோல பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமக சார்பில் சி.அன்புமணி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. நாம் தமிழர் கட்சியும் களத்தில் குதித்துள்ள நிலையில் ஹோமியோபதி மருத்துவரான அபிநயா வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். அதே நேரத்தில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக தேர்தலில் இருந்து பின்வாங்கியுள்ள நிலையில் அங்கு மும்முனை போட்டி உருவாகி இருக்கிறது.

விக்கிரவாண்டி தொகுதியை பொருத்தவரை வன்னியர்கள் அதிகம் வாழும் பகுதியாக இருக்கிறது. இதனை குறி வைத்து பாமகவும் நாம் தமிழரும் வேட்பாளர்களை களம் இறக்கி இருக்கின்றனர். சி.அன்புமணி ஏற்கனவே 2016 தேர்தலில் பாமக தனித்துப் போட்டியிட்டபோது சுமார் 40,000 வாக்குகளை தனித்தே பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதனை மனதில் வைத்தே அவரை மீண்டும் களத்தில் இறக்கி இருக்கிறது பாமக. அதே போல இதே சமுதாயத்தைச் சேர்ந்த அபிநயா வேட்பாளராக நாம் தமிழர் கட்சி சார்பில் களம் இறக்கப்பட்டு இருக்கிறார்.

இவரும் தர்மபுரி தொகுதியில் மக்களவைத் தேர்தலில் சௌமியா அன்புமணியை எதிர்த்து போட்டியிட்ட நிலையில் தற்போது மீண்டும் விக்கிரவாண்டி தொகுதியில் களம் இறக்கப்பட்டிருக்கிறார். நாம் தமிழர் கட்சியும் பாமகவினரும் வீதி வீதியாக சென்று பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக அன்புமணி ராமதாஸ் அவரது மனைவி சௌமியா அன்புமணியும் ஊர் ஊராகச் சென்று வாக்கு திரட்டி வருகின்றனர்.

மேலும் திமுக எப்படி எல்லாம் வாக்கு சேகரிக்கிறது என்பது குறித்து பாமகவினர் அன்புமணிக்கு தெரிவித்து வருகின்றனர். இதை அடுத்து வாக்குக்கு பணம் கொடுப்பது குறித்தும், மது பிரச்சினையால் ஏற்படும் தீங்குகள் குறித்தும் எடுத்துக் கூறி பாமகவினர் வாக்கு சேகரித்து வருகின்றனர்.

அதே நேரத்தில் திரும்பிய பக்கமெல்லாம் திமுக என்பது போல் தான் விக்கிரவாண்டி தேர்தல் களம் இருக்கிறது. ஆளும் கட்சி என்ற பலம், நாடாளுமன்ற தேர்தலில் கிடைத்த மிகப்பெரிய வெற்றி, உள்ளிட்டவற்றோடு திமுக வேட்பாளர் களம் கண்டிருக்கிறார். அவருக்கு ஆதரவாக 25 அமைச்சர்கள் தேர்தலில் பணியாற்றி வருகின்றனர். மாவட்ட அமைச்சரான பொன்முடி அருகில் உள்ள மாவட்ட அமைச்சர்களான எவ வேலு, செஞ்சி மஸ்தான், கேஎன் நேரு, சிவசங்கர், தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் உள்ளிட்ட 25 அமைச்சர்கள் ஊருக்கு இருவர் என பணியாற்றி வருகின்றனர்.

இது மட்டுமல்லாமல் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் ஒரு தேர்தல் அலுவலகம், 200 வாக்காளர்களுக்கு ஒரு அலுவலகம் என அமைத்து காலை மாலை என இருவேளையும் அவர்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் திமுகவினர். அது மட்டுமல்லாமல் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள தேர்தல் அலுவலகங்களில் தங்கள் குறைகளை சொன்னால் வாக்காளர்கள் உடனடியாக 'கவனிக்கப்படுவர்' என திமுகவினர் கூறி வருவது வாக்காளர்களை கவனிக்க வைத்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல் தேர்தல் அலுவலகங்களில் காலை மாலையில் டீ, வடை, காபி, மினி டிபன், போண்டா என அசத்தி வருகின்றனர். இதனால் திமுக அலுவலகங்கள் எப்போதும் பிசியாகவே இருக்கிறது.

இது மட்டுமல்லாமல் பூத் முகவர்கள் நியமிக்கப்பட்டு தங்கள் வாக்குச்சாவடிக்கு உட்பட்ட பகுதிகளில் பத்து வாக்காளர்களுக்கு ஒரு திமுகவினர் என்ற வகையில் அவர்களும் வாக்காளர்களை காலை மாலை என இருவேளையும் சந்தித்து வாக்குத் திரட்டி வருகின்றனர். இனிவரும் காலங்களில் திமுக தலைவர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், எம்பி கனிமொழி உள்ளிட்ட பலர் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வாக்கு சேகரிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் விக்கிரவாண்டி தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+