சசிகலா விடுதலைக்கு பிறகு... சரணடைந்து விடுவார் முதல்வர்... உதயநிதி ஸ்டாலின் பேச்சு..!

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: சசிகலா விடுதலைக்கு பிறகு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவரிடம் சரணடைந்து விடுவார் என திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற தலைப்பில் விழுப்புரம் மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர் இதனைக் கூறினார். மேலும், ஜெயலலிதா மரணம் எப்படி நடந்தது என்றும் இது தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் பல முறை சம்மன் அனுப்பியும் ஒ.பி.எஸ். ஒருமுறை கூட ஆஜர் ஆகாதது ஏன் என வினவினார்.

Dmk youthwing secretary Udhayanidhi stalin campaign at Vilupuram district

ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தியவரே ஓ.பி.எஸ். தான் என்றும் அப்படியிருக்கும் போது அவர் ஏன் நேரில் விசாரணைக்கு ஆஜராக மறுக்கிறார் என வினவினார்.

மேலும், தமிழகத்தில் நடப்பது அதிமுக ஆட்சி அல்ல என்றும் டெல்லியில் இருந்து தமிழகத்தில் மோடி ஆட்சி நடத்திக் கொண்டிருப்பதாகவும் சாடினார். வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராக உள்ளதாகவும் திமுக ஆட்சி அமைந்தவுடன் ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம் வெளிகொண்டுவரப்படும் என்றார்.

கடந்த நவம்பர் மாதம் 20-ம் தேதி தனது தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணத்தை தொடங்கிய உதயநிதி ஸ்டாலின், இதுவரை நாகை, திருவாரூர், திருச்சி, கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சென்றிருக்கிறார். இதனிடையே விரைவில் தென் தமிழகம் மற்றும் மேற்கு மண்டலத்தில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கவிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+