மின்வாரிய அதிகாரி ரேகாவின் அசிங்கம்.. பட்டப்பகல் 2.30 மணிக்கு விழுப்புரம் அரசு ஆபீஸில்.. பணம் பணம்
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி மற்றும் திண்டிவனம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேர்மையாக வேலை நடக்கும் என்று நம்பிய மக்களுக்கு அதிர்ச்சி தரக்கூடிய சம்பவம் மீண்டும் ஏற்பட்டுள்ளது.. மின்சாரம் என்பது அடிப்படை தேவை என்ற நிலையில், அதை பெறுவதற்கு கூட லஞ்சம் கொடுக்க வேண்டிய அவலம் பொதுமக்களுக்கு பெரும் மன உளைச்சலை தந்துவிடுகிறது. நேற்று விழுப்புரத்தில் என்ன நடந்தது?
நேற்றுதான் சென்னை ஆவடியில் புதிய மின் இணைப்பு வழங்க 15,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய மின்வாரிய வருவாய் மேற்பார்வையாளர் கையும் களவுமாகப் பிடிபட்ட சம்பவம் அதிர்ச்சியை தந்திருந்தது...

விவசாயி விண்ணப்பம்
அதாவது ஆவடி கோவில்பதாகை பொண்ணப்பிள்ளை நகரைச் சேர்ந்த விவசாயி ராகவன் என்பவர், தான் புதிதாக வீடு ஒன்றை கட்டி வருகிறார்.. இவர் தன்னுடைய வீட்டிற்கு மின் இணைப்பு கோரி கோவில்பதாகை மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார்.
இந்த விண்ணப்பத்தை பரிசீலனை செய்த வருவாய் மேற்பார்வையாளர், சென்னை வியாசர்பாடியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவர், மின் இணைப்பு வழங்க 15,000 ரூபாய் லஞ்சம் தர வேண்டும் என ராகவனிடம் கேட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ராகவன், லஞ்சம் கொடுக்க விரும்பாமல் திருவள்ளூர் ஊழல் தடுப்புத்துறை போலீஸாரிடம் புகார் தந்துவிட்டார்..
மின்வாரிய அலுவலகம்
போலீசார் அறிவுரைப்படி, மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று பாலசுப்பிரமணியனிடம் பணத்தை தந்துள்ளார்.. அவர் அந்தப் பணத்தை வாங்கியபோது, அங்கு மறைந்திருந்த போலீஸ் டீம், பாலசுப்பிரமணியத்தைக் கையும் களவுமாக பிடித்து அரெஸ்ட் செய்தனர்.
மின் இணைப்புக்காக லஞ்சம் வாங்கிய அதிகாரி போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் செல்லப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இப்போது மீண்டும் ஒரு சம்பவம் விழுப்புரம் மாவட்டதில் நடந்துள்ளது..
திண்டிவனம் தாலுகா ரெட்டணை அடுத்த நாரேரிகுப்பத்தைச் சேர்ந்த விவசாயி ஹரிகிருஷ்ணன். இவர் தனது புதிய வீட்டிற்கு மின் இணைப்பு பெறுவதற்காக முறைப்படி விண்ணப்பித்து காத்திருந்தார். ஆனால் அரசு நிர்ணயித்த கட்டணங்களைத் தாண்டி, தனிப்பட்ட முறையில் ஒரு தொகை கைமாறினால் மட்டுமே வேலை நடக்கும் என்ற நிலை அங்கே நிலவியது.
ரேகா கேட்ட லஞ்சம்
லஞ்சம் என்பது அதிகாரத்தின் ஒரு அங்கமாக மாறிவிட்டதோ என்ற சந்தேகம் எழும் வகையில், மின்வாரிய ஆய்வாளர் ரேகா அவரிடம் வெளிப்படையாகவே லஞ்ச பணத்தை கேட்டுள்ளார்.
விவசாயி ஹரிகிருஷ்ணன் ரெட்டணையில் உள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு சென்றபோது, அங்கு பணியில் இருந்த மின்வாரிய வணிக ஆய்வாளர் ரேகா 4,000 ரூபாய் லஞ்சமாக தந்தால் மட்டுமே மின் இணைப்பு வழங்க முடியும் என்று கறாராக கூறிவிட்டார்.
இதனால் அதிர்ச்சியடைந்த ஹரிகிருஷ்ணன், தவறான முறையில் பணத்தைக் கொடுத்து வேலையை முடிக்க விரும்பாமல், விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் தந்துவிட்டார்.,. அளித்த புகாரின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. சரவணன் மற்றும் இன்ஸ்பெக்டர் ஈஸ்வரி ஆகியோர், ரசாயனம் தடவிய 4,000 ரூபாய் நோட்டுகளை ஹரிகிருஷ்ணனிடம் கொடுத்து, அதை ரேகாவிடம் வழங்குமாறு அறிவுறுத்தினர்.
சுற்றி வளைத்து கைது
நேற்று மதியம் 2:30 மணியளவில் லஞ்ச ஒழிப்புப் போலீசார் மறைந்திருந்து கண்காணிக்க, ஹரிகிருஷ்ணன் அந்த ரசாயனம் தடவிய நோட்டுகளை ஆய்வாளர் ரேகாவிடம் கொடுத்தார். அந்தப் பணத்தை அவர் வாங்கிய அடுத்த நொடியே, மறைந்திருந்த போலீசார் அவரை சூழ்ந்து கொண்டு, கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.. கைதான ரேகா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
தினம் தினம் லஞ்சம் வாங்கி கைதாகுபவர்களின் எண்ணிக்கை பெருகி கொண்டே வருகிறது.. பெண்கள் உட்பட அரசு அதிகாரிகள் தங்கள் கடமையை சரியாக செய்ய வேண்டும் என்பதே ஒட்டுமொத்த மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications