விழுப்புரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திமுகவா இது? ஏன் இப்படி செய்கிறார்கள்?.. விழுப்புரத்தை குறி வைத்து காய் நகர்த்தும் மாஜி அமைச்சர்

முக ஸ்டாலினின் திமுக அரசை சிவி சண்முகம் குற்றஞ்சாட்டி உள்ளார்

Google Oneindia Tamil News

விழுப்புரம்: அதிமுக ஆட்சியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த பல்வேறு திட்டங்களை. திமுக அரசு ரத்து செய்திருப்பதாக மாஜி அமைச்சர் சிவி சண்முகம் குற்றம்சாட்டியுள்ளார்... அத்துடன் திமுக அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளையும் முன்வைத்துள்ளார்.

தமிழக சட்டமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகின்றது.. இதில் ஏராளமான திட்டங்கள், சலுகைகள், துறை வாரியாக அறிவிக்கப்பட்டு வருகின்றன.

மேலும், மானியக் கோரிக்கை மீதான விவாதங்களும் தினந்தோறும் நடந்து வருகிறது.. இந்நிலையில், திமுக அரசை முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் விமர்சித்துள்ளார்.

 இடி மின்னலுடன் 9 மாவட்டங்களில் 3 நாட்களுக்கு மழை அடி வெளுக்கும் - நல்ல செய்தி சொன்ன வானிலை மையம் இடி மின்னலுடன் 9 மாவட்டங்களில் 3 நாட்களுக்கு மழை அடி வெளுக்கும் - நல்ல செய்தி சொன்ன வானிலை மையம்

விழுப்புரம் மாவட்டம் வானூர் தொகுதிக்கு உட்பட்ட கண்டமங்கலம் வடக்கு மற்றும் தெற்கு ஒன்றிய கழகம் சார்பில் உள்ளாட்சி தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.. இந்த கூட்டத்தில், சிவி சண்முகம் கலந்து கொண்டு பேசியதாவது:

 திட்டங்கள்

திட்டங்கள்

"தமிழக கிராமப்புற மக்களின் நலனுக்காக ஆடு, மாடுகள் வழங்கக்கூடிய திட்டத்தை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்தார்.. இதேபோல் மாணவர்கள் நலன் கருதி மடிக்கணினி திட்டமும், 2.5 லட்சம் மகளிருக்கு 25 ஆயிரம் ரூபாய் மானியத்தில் அம்மா இருசக்கர வாகனத் திட்டத்தையும் அறிமுகப்படுத்தினார். இந்த திட்டங்களை ரத்து செய்துள்ள ஆளும் திமுக அரசு மீது தமிழக மக்கள் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர்.

 பூங்கா

பூங்கா

இதற்கு நிதி இல்லை என்று திமுக காரணம் சொல்கிறது.. அப்படியானால், 2,500 கோடி ரூபாயில் சென்னையில் பூங்கா அமைக்க திமுக அரசு திட்டமிட்டது ஏன்? அதனால், இதுபோன்ற விஷயங்களை கழகத் தொண்டர்கள் தான் பொதுமக்களிடம் எடுத்து செல்ல வேண்டும்... திமுகவில் இதுவரை நிறைவேற்றப்படாத தேர்தல் வாக்குறுதிகளையும், தவறான செயல்பாடுகளையும் பற்றி மக்களிம் விடாமல் எடுத்துரைக்க வேண்டும்.

பதவி

பதவி

நம்முடைய கண்டமங்கலம் ஒன்றியமானது அதிமுகவின் கோட்டை என்பது நன்றாகவே தெரியும்.. இதை வரப்போகும் உள்ளாட்சி தேர்தலிலும் நாம் நிரூபிக்க வேண்டும்.. இதற்காக கழகத்தினர் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டு கண்டமங்கலம் ஒன்றியத்தில் உள்ள அனைத்து பதவிகளிலும் நாம் வெற்றி பெற வேண்டும்" என்றார்.

திமுக

திமுக

விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது.. தேர்தல் நடக்க உள்ள 9 மாவட்டங்களில் விழுப்புரமும் ஒன்றாகும்.. ஏற்கனவே திமுக வட மாநிலங்களை குறி வைத்து களப்பணியில் ஈடுபட்டு வருகிறது.. அந்த வகையில் விழுப்புரத்திலும் கவனத்தை செலுத்தி வரும் வரும் நிலையில், சிவி சண்முகம், இப்போதே வெற்றிக்கான காய் நகர்த்தலில் ஈடுபட்டு வருவது, தேர்தல் களத்தின் பரபரப்பை கூட்டி வருகிறது.

English summary
Ex minister CV Shanmugam slams DMK gov govt and CM Stalin
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X