அல்வா கொடுத்துதான் இறந்தார் ஜெயலலிதா.. அமைச்சர் பகீர் தகவல்
விழுப்புரம்: சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு, அல்வா கொடுத்து சாகடித்து விட்டதாக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றம்சாட்டியுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற அதிமுக பூத் கமிட்டி கூட்டத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது :

காய்ச்சல் காரணமாக ஜெயலலிதா மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார் என்று கூறினார்கள். ஆனால், மாரடைப்பால் அவர் உயிரிழந்துவிட்டதாக கூறுவதாக குற்றம் சாட்டினார்.
இந்த விவகாரத்தை உரிய முறையில் விசாரித்தால் மட்டுமே உண்மை வெளிவரும் என்றும் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.
தமிழக அரசு வழங்கிய இலவச மிக்சி, கிரைண்டரை தீயிட்டு கொளுத்துவது போல் தனது படத்தில் ஏ .ஆர் முருகதாஸ் காட்சி அமைத்துள்ளதற்கு கண்டனம் தெரிவித்த சி.வி.சண்முகம், திமுக கொடுத்த இலவச டிவியை எரிப்பது போன்ற காட்சியை வைக்காதது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார்.
முன்னதாக, மக்களை வன்முறைக்கு தூண்டும் செயலில் நடிகர் விஜய் ஈடுபடுகிறார் என அமைச்சர் சி.வி. சண்முகம் குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
