"ஓசி" முதல் "வாயை மூடு" வரை..மீண்டும் மீண்டும் சர்ச்சையில் சிக்கும் அமைச்சர் பொன்முடி
இலவச பஸ் பயணத்தை ஓசி என்று சொன்னதில் இருந்து குறை சொன்ன பெண்ணைப் பார்த்து வாயை மூடு என்று அமைச்சர் பொன்முடி கூறியது மீண்டும் சர்ச்சையாகியுள்ளது.
விழுப்புரம்: நாம் பேசும் வார்த்தைகளை ஒருமுறைக்கு பலமுறை யோசித்து பேச வேண்டும். வார்த்தையை கொட்டினால் அள்ள முடியாது என்று சொல்வார்கள். சாதாரண மனிதர்களுக்கே இப்படி என்றால் அரசியல்வாதிகள் சொல்லும் சொல் அப்படியே கல்வெட்டாகி விடும். இன்றைக்கு பல அமைச்சர்கள் பல நேரங்களில் பேசும் வார்த்தைகள் சர்ச்சையாகிவிடுகின்றன. அமைச்சர் பொன்முடி பேசும் பேச்சுக்கள் அடிக்கடி சர்ச்சையாகும். அவ்வப்போது வருத்தம் தெரிவித்தாலும் மீண்டும் மீண்டும் எதையாவது பேசி சர்ச்சையில் சிக்கிக்கொள்கிறார்.
பாத்ரூம், பெட்ரூமை தவிர மற்ற இடங்கள் பொது இடங்கள் என ஆகிவிட்டது. எல்லா இடத்திலும் நம்மைக் கண்காணிக்கிறார்கள். பொதுவெளியில் அமைச்சர்களும், கட்சியினரும் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் திமுக பொதுக்குழுவில் பேசியிருந்தார்.
இன்று ஏதாவது வம்பு வந்து விடுமோ என்று நினைத்து தூக்கத்தை தொலைப்பதாகவும் வருத்தப்பட்டிருந்தார் முதல்வர் மு.க ஸ்டாலின். முதல்வர் என்னதான் கூப்பிட்டு நேரடியாக எச்சரித்து அனுப்பினாலும் திமுகவினர் தொடர்ந்து பொதுவெளியில் பேசும் பேச்சுகள் சர்ச்சையை கிளப்பி வருகிறது.

மகளிர் ஓசி பயணம்
அமைச்சர் பொன்முடி ஏற்கனவே மகளிர் இலவச பேருந்து திட்டத்தை ''ஓசி'' என்று சொல்லி சர்ச்சையில் சிக்கினார். சமூகவலைத்தளங்களில் அது விவாதப்பொருளாகவே தான் பேசியது எதார்த்தமானது என்று கூறி வருத்தம் தெரிவித்தார். கடந்த ஆண்டு விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் அருகே உள்ளது சித்தலிங்கமடம் ஊராட்சியில் நடைபெற்ற போராட்டத்தின் போது அப்பகுதி மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்த பொன்முடி வந்திருந்தார். அப்போது அமைச்சர் பொன்முடியை முற்றுகையிட்ட மக்கள், அவரிடம் சரமாரியாகக் கேள்வி எழுப்பத் தொடங்கினர். இதனால் ஆத்திரமடைந்த அமைச்சர் பொன்முடி அவர்களிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒருவரை ஒருமையில் திட்டினார். மேலும், கிராம மக்களின் கோரிக்கையை ஏற்றுத்தான் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். உங்களை யாரோ தூண்டிவிடுகிறார்கள் என்று கூறினார்.

ஓட்டு போட்டு கிழிச்சிட்டீங்க
கடந்த வாரம் திருவெண்ணைநல்லூர் அருகே திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அருங்குறிக்கை கிராமத்தில் கட்டப்பட்டுள்ள அரசு பள்ளி கட்டிட திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் திமுக அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு புதிய கட்டிடங்களை திறந்து வைத்து பேசினார். அப்போது உங்கள் கிராமத்தில் ரோடு வசதி, தெரு மின்விளக்கு வசதி, குடிநீர் வசதிகளை நான் தான் செய்து கொடுத்தேன் என பேசி கொண்டிருந்த போதே கூட்டத்தில் அமர்ந்திருந்த பெண்கள் சிலர் எழுந்து குடிநீரே வருவதில்லை எனக் கூறி கூச்சல் எழுப்பினர். இதனால் ஆத்திரமடைந்த திமுக அமைச்சர் பொன்முடி, இந்த அருங்குறிக்கை கிராமத்தில் அப்படியே எனக்கு ஓட்டு போட்டு கிழி, கிழின்னு கிழிச்சிட்டீங்க.. கேட்க வந்துட்டீங்க.. உட்காருங்கள்... நான் எப்போ வந்தாலும் இந்த அருங்குறிக்கையில் இப்படி தான் கத்துவீங்கன்னு எனக்கு தெரியும் என ஆவேசமாக பேசினார்.

எல்லாம் குறையா இருக்கு
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அமைச்சர் பொன்முடி பங்கேற்றார். தையல் மெஷின், கேஸ் ஸ்டவ் என பல பொருட்களை அமைச்சர் வழங்கி விட்டு மேடையில் பேசினார். அப்போது அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களைப் பற்றி பேசிக்கொண்டிருந்தார் பொன்முடி. அப்போது ஒரு பெண் எல்லாம் குறையாகத்தான் இருக்கு என்று சொன்னார். அதற்கு அமைச்சர் ஆ..குறையா என்று கேட்டார்.

கொஞ்சம் வாயை மூடு
எரிச்சலுடன் சைகையில் கையை வைத்து வாயை மூடு என்று முதலில் சொன்னவர்..மீண்டும் அந்த பெண் பேசவே நீ கொஞ்சம் வாயை மூடு என்று சொன்னார்..பின்னர் உங்க வீட்டுக்காரர் வந்து இருக்காரா என்று கேட்டார் பொன்முடி..அதற்கு அந்த பெண் அவர் எப்பயோ போயிட்டார் என்று சொல்லவே..சிரித்துக்கொண்டே..போயிட்டாரா?பரவாயில்ல நல்ல வேளை அவர் போயி சேர்ந்துட்டார் என்று கிண்டலாக கூறினார். சலசலப்பு ஏற்படவே அட சும்மா இருங்கப்பா அவங்க குறையை சொல்றாங்க என்று சொன்னார்.

சர்ச்சையில் சிக்கும் திமுகவினர்
முதல்வர் எத்தனை முறை சொன்னாலும் திமுகவினர் அடிக்கடி சர்ச்சையில் சிக்குவது தொடர்கதையாகி வருகிறது. நேற்றைய தினம் திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு, திருச்சி சிவா ஆதரவாளர்களிடையே ஏற்பட்ட மோதலில் காவல்நிலையமே கலவரபூமியாக மாறியது. இதனையடுத்து சிலர் கைது செய்யப்பட்டனர். அடிதடி மோதலில் ஈடுபட்ட நான்கு பேரை கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கி உத்தரவிட்டார் துரைமுருகன். ஆளுங்கட்சியாக உள்ள திமுக தனது செயல்பாடுகளால் மக்கள் மனதில் நல்ல பேரை எடுத்தாலும் ஒருசிலரின் செயல்பாடுகளால் ஆட்சியின் மீதான நற்பெயர் பாதிக்கும் நிலை ஏற்படுகிறது. முதல்வர் கடிவாளம் போட்டால் மட்டுமே சர்ச்சைகள் ஓயும் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
-
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
வணிக சிலிண்டர்கள் விநியோகத்தை 70% ஆக உயர்த்திய மத்திய அரசு.. யாருக்கு முன்னுரிமை? -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்படும் 234 வேட்பாளர்கள்! ஃபயர் மோடில் விஜய்! தயாரான தவெக! -
இன்னொரு ரவுண்டு மழை.. இந்த மாவட்டங்களுக்கு ஜில் அப்டேட்! குட் நியூஸ் சொன்ன வானிலை மையம் -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
சிலர் சிரிப்பார்! சிலர் அழுவார்! நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகின்றோம்! திமுகவால் புலம்பும் மதிமுக -
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
ஈரோட்டில் வெளுத்த வெயில்.. 100 டிகிரியை தாண்டியது! வேலூருக்கு இரண்டாவது இடம் -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்!












Click it and Unblock the Notifications