பிறந்தமேனியாக பெண் அரசு ஊழியர் முன்பு நின்ற நபர்.. நீளும் அட்டகாசம்! இந்த நம்பரை தொடாதீங்க: போலீஸ்
விழுப்புரம்: நாளுக்கு நாள் சோசியல் மீடியாவில் மோசடிகள் பெருகியபடியே உள்ள நிலையில் சில குறிப்பிட்ட எண்களிலிருந்து போன் வந்தால், அந்த அழைப்பை எடுக்க வேண்டாம் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.. அத்துடன், அந்த எண்ணையும் பொதுமக்கள் நன்மைக்காக வெளியிட்டிருக்கிறார்கள்.
தற்போதைய தொழில்நுட்ப காலகட்டத்தில் டிஜிட்டல் மோசடி சம்பவங்கள் அதிகரித்துள்ளது. அதனால், புது நம்பர்களிலிருந்து அழைப்பு வந்தால், அதை எடுக்கக்கூடாது என்று போலீசார் அறிவுறுத்துகிறார்கள். அப்படியிருந்தும், விழுப்புரத்தில் நேற்று ஒரு கொடுமை நடந்துள்ளது..

கோட்டக்குப்பத்தைச் சேர்ந்த அந்த பெண்ணுக்கு 32 வயதாகிறது.. இவர் ஒரு அரசு ஊழியர் ஆவார்.. நேற்றைய தினம் விடுமுறை என்பதால், வீட்டில் குடும்பத்துடன் இருந்தார்..
அப்போது, வாட்ஸ்அப்பில் வீடியோ கால் வந்துள்ளது.. ஆனால், அந்த நபர் யாரென்று தெரியவில்லை.. முகம் தெரியாத நபர் என்பதால், அந்த அழைப்பை , பெண் ஊழியர் துண்டித்துவிட்டார்.
வாட்ஸ்அப் கால் வீடியோ
ஆனால், மீண்டும் மீண்டும் வீடியோ கால் வந்துள்ளது... தொடர்ந்து போன் செய்யவும், அந்த வாட்ஸ்அப் கால் ஆன் செய்துள்ளார்.. அப்போதுதான், வீடியோ காலில் அந்த நபர், திடீரென்று தன்னுடைய ஆடைகளை கழட்டி நிர்வாணமாக நின்றார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பெண், கூச்சலிட்டு கணவரிடம் செல்போனை காண்பித்துள்ளார்..
உடனே எதிர்முனையில் இருந்த நபர் வீடியோ காலை துண்டித்துவிட்டாராம்.. இதையடுத்து, பெண் அரசு ஊழியரும், அவரது கணவரும் கோட்டக்குப்பம் போலீசில் புகார் அளித்தனர்..
சைபர் கிரைம் போலீஸ்
இந்த புகாரின்பேரில், வீடியோ காலுக்கு வந்த செல்போன் நம்பரை வைத்து ஆய்வு செய்தபோது, அந்த எண், மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்தது என காட்டியது.. அத்துடன், பிரபல இந்தி நடிகை ஒருவரின் போட்டோவும் அந்த எண்ணில் இருந்துள்ளது.. இதையடுத்து, அந்த எண்ணை ஆராய்ந்ததில், அதுவொரு மோசடியான அழைப்பு என்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.
இதனால், நிர்வாணமாக தோன்றிய அந்த நபர் யாரென்பதை கண்டுபிடிக்க முடியவில்லை.. எனவே, இது தொடர்பான விசாரணையும் ஆரம்பமானது.. இதற்காக, விழுப்புரம் சைபர் கிரைம் போலீசாருக்கு கோட்டக்குப்பம் போலீசார் பரிந்துரை செய்துள்ளனர்.. இதனால், அந்த மர்ம நபர் யாரென்ற விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.
போலீஸார் அறிவுறுத்தல்
ஆனால், பெண்களின் செல்போனில் நிர்வாணமாக தோன்றி, அதனை பதிவு செய்து, அவர்களை மிரட்டி பணம் பறிக்கும் நோக்கில் இந்த வீடியோ கால் வந்துள்ளதால், பெண்கள் இதுபோன்ற வீடியோ கால் விஷயத்தில் உஷாராக இருக்குமாறு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மீண்டும் போலீசார் அலர்ட்
முன்பின் தெரியாத அழைப்பை ஏற்கக்கூடாது என்று ஏற்கனவே போலீசார் பலமுறை அட்வைஸ் தந்திருந்த நிலையில், மீண்டும் இப்படியொரு சம்பவம் விழுப்புரத்தில் நடந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இதற்கு நடுவில், வங்கி மோசடியும் பெருகி வருவதால், அதுகுறித்தும் போலீசார் மீண்டும் அலர்ட் செய்திருக்கிறார்கள்.. ஆதார் மோசடி, வாட்ஸ் அப் மோசடி என பல்வேறு மோசடிகளில் பலரும் சிக்கி பணத்தை இழந்து தவித்து வருகிறார்கள்..
+371, +381 என்ற எண்கள்
இதுபோக, பொய்யான குற்றச்சாட்டுகளை உங்கள் மீது சுமத்தி, கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க அதிக பணம் செலுத்த வேண்டுமென்றும் மோசடியில் ஈடுபட்டு வருகிறார்களாம். சமீபத்தில் கூட, 17,000 வாட்ஸ் அப் கணக்குகளை மத்திய உள்துறை அமைச்சகம் முடக்கியிருந்தது..
இந்நிலையில், டிஜிட்டல் அரெஸ்ட் என்ற பெயரில் உங்களை ஏமாற்றி மோசடி கும்பல் பணம் பறித்து வருகிறதாம்.. +371, +381 என்ற எண்களில் இருந்து உங்களுக்கு திடீரென மிஸ்டு கால் வரும். அது யார் என தெரிந்து கொள்ள, நீங்கள் மறுபடியும் அதே நம்பருக்கு போன் செய்தால், உங்களுக்கு கிட்டத்தட்ட ரூ.1,200 பில் வந்துவிடுமாம்.. அதுமட்டுமல்ல, அந்த அழைப்பிலிருந்து, உங்களின் பர்சனல் டேட்டாவையும் திருடிவிடுவார்கள் என்பதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று போலீசார் வார்னிங் தந்துள்ளனர்.
-
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு












Click it and Unblock the Notifications