நான் இறங்கி வரவா? வேட்டியை மடித்துக் கட்டி இறங்கிய அமைச்சர் பொன்முடி! அசந்து போன மாணவர்கள்..!
விழுப்புரம் : தமிழக அரசின் விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்ட தலைநகரங்களில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் விழுப்புரத்தில் விளையாட்டுப் போட்டிகளை துவக்கி வைத்த அமைச்சர் பொன்முடி வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு மாணவர்களுடன் கபடி விளையாடிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
தமிழ்நாடு அரசின் சார்பில் ஆண்டுதோறும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இணைந்து முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளை நடத்தி வருகிறது.

இந்த நிலையில் 2024ஆம் ஆண்டுக்கான முதலமைச்சர் கோப்பைக்கான பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் நடைபெற்று வருகிறது. பள்ளி, கல்லூரி, மாணவ, மாணவிகள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள் என பல்வேறு பிரிவுகளில் மொத்தம் 27 விளையாட்டுப் போட்டிகள் ஆண்கள் பெண்களுக்கு என தனித்தனியே நடத்தப்படுகிறது.
தற்போது பள்ளி மாணவ மாணவிகளுக்கான போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் மாவட்ட அளவில் போட்டிகள் நடைபெறுகிறது. இந்த போட்டிகளில் வெற்றி பெறும் வீரர்கள். மண்டல அளவிலான போட்டிகளுக்கும். மண்டல அளவிலான போட்டியில் வெற்றி பெறும் வீரர்கள் சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான போட்டிகளுக்கு தகுதி பெறுவார்கள். தொடர்ந்து அவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளது.

சிலம்பம், கால்பந்து, வாலிபால், கபடி, டேபிள் டென்னிஸ் உள்ளிட்ட போட்டிகள் 12 வயது முதல் 19 வயதுக்குட்பட்ட பிரிவுகளில் நடத்தப்படுகிறது. இதை அடுத்து தமிழகம் முழுவதும் ஏராளமான பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் இளைஞர்கள் இந்த போட்டிகளில் கலந்து கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளை தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்தார்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் இன்று தொடங்கியது. இந்த போட்டிகளை உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி மற்றும் விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் பழனி ஆகியோர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் தொடக்கி வைத்தனர்.
பின்னர் நிகழ்ச்சியில் விளையாட்டு வீரர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்த அமைச்சர் பொன்முடி, ங்கு கபடி விளையாடிக் கொண்டிருந்த மாணவர்களுடன் கபடி போட்டியில் கலந்து கொண்டு வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு உற்சாகமாக கபடி விளையாடினர். சிறிது நேரம் கபடி ஆட்டத்துடன் மற்ற விளையாட்டுப் போட்டுகளில் கலந்து கொண்ட வீரர் வீராங்கனைகளையும் அவர் வாழ்த்தினார்.
-
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ! -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான்












Click it and Unblock the Notifications