20 பவுன் நகை, 15 லட்சத்துடன் வெளியேறி கள்ளக்காதலனுடன் மனைவி உல்லாச வாழ்க்கை.. போஸ்டர் அடித்த கணவர்
விழுப்புரம்: கள்ளக்காதல் கண்ணை மறைத்த நிலையில் கணவரை உதறி தள்ளிவிட்டு நகை, பணத்துடன் கள்ளக்காதலனுடன் மாயமான மனைவி குறித்து அவரது கணவர் ஊர் முழுவதும் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் கங்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன். அவரது மனைவி விஜி. இவர்களுக்கு இரு பெண் குழந்தைகள். இந்த நிலையில் சில வாரங்களுக்கு முன்பு வெங்கடேசனின் மனைவிக்கும் அதே பகுதியை சேர்ந்த கன்னியப்பனுக்கும் பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது.

இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து தங்களது கள்ளக்காதலை வளர்த்து வந்தனர். இந்த விவகாரம் அரசல் புரசலாக வெங்கடேசனுக்கு தெரியவந்தது. இதனால் மனைவியை கண்டித்துள்ளார்.
ஆனாலும் கேட்காமல் கன்னியப்பனுடனான கள்ளக்காதலை வளர்த்துக் கொண்டே இருந்தார். இதனால் ஆத்திரமடைந்த வெங்கடேசன் தனது மனைவி விஜியை கடுமையாக கண்டித்துள்ளார். இதையடுத்து இருவருக்கும் வாய்த் தகராறு ஏற்பட்டது. இந்த சண்டையில் "நான் கன்னியப்பனுடன்தான் வாழ்வேன்" என விஜி கூறியதாக தெரிகிறது.
இதையடுத்து இனியும் வீட்டில் இருந்தால் கள்ளக்காதலுக்கு வெங்கடேசன் இடையூறு செய்துவிடுவார் என்பதால் கடந்த இரு தினங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேற விஜி முடிவு செய்தார். இதையடுத்து வீட்டில் இருந்த 20 சவரன் நகை, ரூ 15 லட்சம் பணத்தை ஆகியவற்றை எடுத்துச் சென்றார்.
இதையடுத்து காலையில் மனைவியை பார்த்த போது ஆள் இல்லை. வீட்டின் பீரோவில் இருந்த பணம், நகை எல்லாம் காணவில்லை, பொருட்களும் கலைத்து போடப்பட்டிருந்தன. விஜியின் துணிமணிகளையும் காணவில்லை. மேலும் அவரை அக்கம்பக்கத்தில் தேடிய நிலையில் அவர் கன்னியப்பனுடன் சென்றுவிட்டது தெரியவந்தது.
இதனால் உச்சகட்ட ஆத்திரத்திற்கு சென்ற வெங்கடேசன், விஜியை பழிவாங்க கோலியனூர் முழுவதும் போஸ்டர் அடித்து ஒட்டி விட்டார். முக்கிய அறிவிப்பு என அறிவிக்கப்பட்டுள்ள போஸ்டரில் விஜி என்பவர் வெங்கடேசனை கல்யாணம் செய்து 25 ஆண்டுகளாகி அனு, அம்மு என்ற இரு பெண் பிள்ளைகள் பேரக் குழந்தைகள் உள்ளது.
இவர் சமீபகாலமாக என்னிடம் இருந்த 20 பவன் நகை,15 லட்ச ரூபாய் ரொக்கத்தை எடுத்துக் கொண்டு கோலியனூர் கங்கையம்மன் கோயில் தெருவை சேர்ந்த கன்னியப்பன் என்பவருடன் சேர்ந்து உல்லாச வாழ்க்கை வாழ்கிறார். என் உயிருக்க ஆபத்து உள்ளது என குறிப்பிட்டுள்ளார். இவர் முன்னாள் கவுன்சிலர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications