ஓப்பனாக பேசிட்டேன்.. இனிமே தான் கதறல் அதிகமாக போகுது.. தவெக மாநாட்டில் சீண்டி பேசிய விஜய்

Subscribe to Oneindia Tamil

விக்கிரவாண்டி: பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என்று சொல்லிய போதே நம்முடைய உண்மையான எதிரி யார் என்று சொல்லிவிட்டோம்.. சமதர்ம சபதத்தை கையில் எடுத்த போதே.. இங்க கொஞ்சம் கதறல் சத்தம் கேட்டது.. இப்போ இந்த மாநாட்டில் ஓப்பனாக அறிவிச்ச பிறகு இந்த கதறல் சத்தம் இன்னும் இன்னும் சத்தமாக கேட்கும் என பாஜகவை சீண்டும் வகையில் விஜய் பேசினார்.

தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று நடந்தது. இந்த மாநாட்டில் தவெக தலைவர் விஜய் கட்சியின் கொள்கை, கோட்பாடுகள், என்னென்ன செயல்திட்டங்கள் என்பதையெல்லாம் கூறினார். மாநாட்டுக்கு வரும்போதே வழக்கத்துக்கு மாறாக விஜய் உற்சாகமாக காணப்பட்டார். வரும்போதே விஜய் முகத்தில் ஒரு மகிழ்ச்சி தெரிந்தது.

tvk maanadu tamilaga vetri kazhagam actor vijay

வழக்கமாக விஜய் நடந்து வருவதை விட இன்று அவரது நடையில் ஒரு விறுவிறுப்பை பார்க்க முடிந்தது. ரேம்ப் வாக் செய்தபோது தொண்டர்கள் உற்சாகமடைந்தனர். மேலும், அவரது அரசியல் பேச்சிலும் வித்தியாசம் தெரிந்தது. இதுவரை பேசாத.. நடிப்பில் மட்டுமே ஆக்ரோஷமாக பேசிய விஜய் இன்று மாநாட்டில் ஆக்ரோஷமாகவும், உற்சாகமாகவும் பேசினார்.

விஜய் பேசியதாவது:- இந்த அரசியல் எல்லாம் நமக்கு எதுக்குங்க.. என்றுதான் ஆரம்பத்தில் நானும் நினைத்தேன். நடித்தோமா.. நாலு காசு பார்த்தோமா என்று தான் நானும் நினைத்தேன்.. ஆனால் நாம மட்டும் நல்லா இருக்கனும்னு நினைச்சா அது சுயநலம் இல்லையா.. ஆனால் நம்ம வாழ வைத்த மக்களுக்கு எதுவும் செய்யாமல் இருந்தால் அது நல்ல விசுவாசமாக இருக்குமா..

ஒரு லெவலுக்கு மேல காசு சேர்த்து என்னங்க செய்ய போகிறோம்.. எனக்கு இந்த வாழ்க்கையை கொடுத்த மக்களுக்கு எதுவும் செய்யாமல் இருந்தால் அது நல்லா இருக்குமா.. இதுக்கு என்ன செஞ்சா தீர்வு வரும்னு.. யோசிச்சு முடிவு எடுத்தது தான் அரசியல்.. அப்படின்னு ஒரு விடை கிடைத்தது. சரி இந்த அரசியல் எப்படிப்பட்டது.. நம்மால் சரியாக ஹேண்டில் பண்ண முடியுமா.. இது நம்ம இயல்புக்கு செட் ஆகுமா.

என பூதம் மாதிரி பல்வேறு கேள்விகள் வந்துகொண்டே இருந்தது. ஆனால் இதையெல்லாம் பூதக்கண்ணாடி வைத்து பார்த்துக்கொண்டே இருந்தால் எதுவும் மாறிவிடாது. சில விஷயங்களில் பின் விளைவுகளை பற்றி யோசிக்காமல் இறங்கி அடித்தால் தான் நம்மள நம்புகிறவர்களுக்கு நல்லது செய்ய முடியும்னு தோனுச்சு.. அதான் இறங்கியாச்சு... இனி எத பத்தியும் யோசிக்க கூடாது.

ஆனால் எடுத்து வைக்கிற ஒவ்வொரு அடியிலும், யோசனையிலும் நிதானமும் இருக்கனும்னு முடிவு பண்ணி தான் வந்துருக்கோம். நாம யாரு? நாம எவ்வளவு ஸ்ட்ராங்.. என்பதையெல்லாம் வாயால் சொல்லக்கூடாது.. செயலில் காட்ட வேண்டும். அதை நிரூபிக்க அரசியலில் நாம என்ன ஸ்டேண்ட் எடுக்க போறோம் என்பதை முடிவு பண்ணனும். ஏனென்றால் அது தான் நம்முடைய எதிரிகள் யார்? என்று சொல்லும்.

அப்படி ஒரு கரெக்டான ஸ்டெண்ட் எடுத்துவிட்டால் போதும்.. நம்ம எதிரிகள் யார் என்று நாம சொல்லவேண்டாம். அவங்களே நம்ம முன்னாடி வந்து நின்னு எதிர்க்க ஆரம்பிப்பார்கள். எதிரிகள் இல்லாத வெற்றிகள் வேண்டும் என்றால் இருக்கலாம்.. ஆனால் களம் இருக்க முடியாது.. அந்த களத்தில் நம்முடைய வெற்றியை தீர்மானிப்பது எதிரிகள் தானே.. நாம கட்சியை அறிமுகம் செய்த போதே.. நம்முடைய உண்மையான எதிரி யார் என்று சொல்லிவிட்டோம்...

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என்று சொல்லிய போதே நம்முடைய உண்மையான எதிரி யார் என்று சொல்லிவிட்டோம்.. பிறப்பதற்கு ஏற்றத் தாழ்வு இல்லவே இல்லை.. அது கூடவே கூடாது என்று ஒரு சமதர்ம சபதத்தை கையில் எடுத்த போதே.. இங்க கொஞ்சம் கதறல் சத்தம் கேட்டது.. இப்போ இந்த மாநாட்டில் ஓப்பனாக அறிவிச்ச பிறகு இந்த கதறல் சத்தம் இன்னும் இன்னும் சத்தமாக கேட்கும் என்று நினைக்கிறேன். இவ்வாறு விஜய் பேசினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+