கள்ளக்குறிச்சி மாணவி வழக்கில் அடுத்த நகர்வு- பிரேத பரிசோதனை ஆய்வறிக்கையை சமர்ப்பித்தது ஜிப்மர் குழு!
விழுப்புரம் : ஜிப்மர் மருத்துவக் குழுவினர் கள்ளக்குறிச்சி மாணவியின் பிரேத பரிசோதனை அறிக்கையை முழுமையாக ஆய்வு செய்து, அறிக்கையை விழுப்புரம் தலைமைக் குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவியின் உடல் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுபடி இரண்டு முறை பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதனை ஆய்வு செய்ய ஜிப்மர் மருத்துவர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது.
இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாணவியின் உடற்கூராய்வு ஆய்வறிக்கையை விழுப்புரம் நீதிமன்றத்தில் ஜிப்மர் மருத்துவக்குழு தாக்கல் செய்தது.

கள்ளக்குறிச்சி மாணவி மரணம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே கணியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த பிளஸ் 2 மாணவி கடந்த ஜூலை 13ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர், உறவினர்கள் கூறிய நிலையில், மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு நடந்த போராட்டம் பெரும் கலவரமாக மாறியது. இதில் பள்ளி சூறையாடப்பட்டது. இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

ரீ-போஸ்ட்மார்டம்
இந்நிலையில், மாணவியின் உடல், கடந்த மாதம் 14ஆம் தேதி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, ஓய்வுபெற்ற தடயவியல் நிபுணர் மற்றும் அரசு மருத்துவர்கள் மூன்று பேர் கொண்ட குழு முன்னிலையில், கடந்த மாதம் 19ஆம் தேதி மறு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

ஜிப்மர் மருத்துவக் குழு
அதன் பின், மாணவியின் இரண்டு பிரேத பரிசோதனை முடிவுகளை ஆய்வு செய்ய, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை தடயவியல் துறை பேராசிரியர் டாக்டர் குஷகுமார் சாஹா, தடயவியல் துறைத் தலைவர் டாக்டர் சித்தார்த் தாஸ், தடயவியல் துறை கூடுதல் பேராசிரியர் டாக்டர் அம்பிகா பிரசாத் பத்ரா ஆகியோர் அடங்கிய குழுவை நீதிமன்றம் நியமித்தது.

முழுமையாக ஆய்வு
உயர் நீதிமன்றத்தின் உத்தரவுபடி, புதுச்சேரி ஜிப்மர் குழுவினரிடம், மாணவியின் பிரேத பரிசோதனை அறிக்கையை சி.பி.சி.ஐ.டி போலீசார் ஒப்படைத்தனர். ஜிப்மர் மருத்துவக் குழுவினர் கள்ளக்குறிச்சி மாணவியின் பிரேத பரிசோதனை அறிக்கையை முழுமையாக ஆய்வு செய்தனர்.

நீதிமன்றத்தில் தாக்கல்
பின்னர், ஆய்வு அறிக்கையை விழுப்புரம் தலைமைக் குற்றவியல் நீதிமன்றத்தில், நீதிபதி புஷ்பராணி முன்னிலையில் நேற்று தாக்கல் செய்தனர். இதற்கிடையே, உயிரிழந்த மாணவியின் தோழிகள் இருவர் நேற்று விழுப்புரம் தலைமைக் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராகி, நீதிபதி முன்னிலையில் ரகசிய வாக்குமூலம் அளித்தது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications