கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழா ரத்து.. திருநங்கைகள் ஏமாற்றம்!
உளுந்தூர்பேட்டை: விழுப்புரம் கூத்தாண்டவர் கோயிலில் இந்தாண்டு நடைபெற இருந்த சித்திரை திருவிழா ரத்து செய்யப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. எனினும் வழக்கம்போல் கூத்தாண்டவர் கோயிலில் பூஜைகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே கூவாகத்தில் பிரசித்தி பெற்ற கூத்தாண்டவர் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம்.
இந்த விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி மும்பை, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களைச் சேர்ந்த திருநங்கைகள் வருகை தருவர்.

அழகி போட்டி
இந்த திருவிழாவை முன்னிட்டு அழகி போட்டி உள்பட பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு திருவிழாவை உற்சாகமாக கொண்டாடுவது வழக்கம். இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த சித்திரை திருவிழா காப்புக் கட்டுதலுடன் சித்திரை 1 ஆம் தேதியான நாளை தொடங்கவிருந்தது.

கட்டுப்பாடுகள்
இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. நேற்றைய தினம் எப்போதும் இல்லாத அளவுக்கு ஒரு நாள் பாதிப்பு தமிழகத்தில் 6 ஆயிரத்தை தாண்டியது. அதை தடுக்க தமிழக அரசு பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.

சித்திரை திருவிழா
அதன்படி மக்கள் ஒன்று கூடுவதை தவிர்க்கும் வகையில் கோயில்களில் சித்திரை திருவிழா உள்ளிட்டவற்றை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்து சமய அறநிலையத்துறையினர் கூத்தாண்டவர் கோயிலில் இந்தாண்டு நடைபெற இருந்த சித்திரை திருவிழா ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளனர்.

ஏமாற்றம்
எனினும் வழக்கம் போல் நித்திய பூஜைகள் நடத்தலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த பூஜையில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி கிடையாது. சித்திரை விழா ரத்து தொடர்பான விவரங்களை அதிகாரிகள் கோயிலுக்கு வெளியே எழுதி வைத்துள்ளனர். இதனால் திருநங்கைகள் ஏமாற்றமடைந்தனர்.
-
தவெக தலைமையில் தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி.. திமுகவுக்கு பிரவீன் சக்ரவர்த்தி செக்மேட் -
தமிழகத்தில் ஒரே நேரத்தில் 60 சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு! -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications