விழுப்புரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஷாக்.. வரிசையாக பஞ்சர் ஆன டயர்கள்.. அதிர்ச்சி அடைந்த திண்டிவனம்.. கடைசியில் யார்னு பார்த்தா..!!

இரு சக்கர வாகனங்கள் திடீரென பஞ்சர் ஆகிவிட்டன

Google Oneindia Tamil News

விழுப்புரம்: ரோட்டோரம் நிறுத்தப்பட்டிருந்த டூ வீலர்களின் டயர்கள் ஒவ்வொன்றும் திடீர் திடீரை என பஞ்சர் ஆகி கொண்டே இருந்தன.. நல்லா இருந்த டயர்கள் திடீரென கிழிந்து தொங்குவதை கண்டு அதிர்ந்த சம்பவம் திண்டிவனத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது!!

ஊரடங்கு அமலில் உள்ளது.. அதனால் தேவையில்லாமல் பொதுமக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என்று கேட்டு கொள்ளப்பட்டனர்.. அதனை பலர் மதித்து நடந்து வருகின்றனர்.

ஒருசிலர் தேவையில்லாமல் வெளியே நடமாடினால் அவர்களுக்கு புத்திமதி சொல்லி, கொரோனா பற்றியும் எடுத்து சொல்லி வீட்டுக்கு போலீசார் அனுப்பி வைக்கின்றனர். நூதன தண்டனையையும் கொடுத்து வருகின்றனர்.

ரெடியாகிறது பஸ்கள்.. தமிழகத்தில் எப்போது ஓட தொடங்கும்.. வெளிமாநிலம் செல்வோர் என்ன செய்யலாம்..?ரெடியாகிறது பஸ்கள்.. தமிழகத்தில் எப்போது ஓட தொடங்கும்.. வெளிமாநிலம் செல்வோர் என்ன செய்யலாம்..?

டூவீலர்கள்

டூவீலர்கள்

அந்த வகையில், தோப்புக்கரணம் போடுதல், இம்போசிஷன் எழுத வைத்தல் போன்ற தண்டனைகளை தந்து வருகின்றனர்.. சில இடங்களில் அவர்களின் டூவீலர்களும் பறிமுதல் செய்யப்படுகின்றன.. அந்த வண்டிகளுக்கு பெயிண்ட் அடிக்கவும் சொல்கின்றனர்.. இதனால் பொதுமக்கள் அதிருப்தி அடைகின்றனர்.. தண்டனை என்ற பெயரில் போலீசார் அத்துமீறுகிறார்கள் என்ற புலம்பலும் எழுந்து வருகிறது.

வினோத தண்டனை

வினோத தண்டனை

பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசாரின் தொடர் மனித உரிமை மீறிய அத்துமீறல்களும் அவர்கள் வழங்கிய வினோத தண்டனைகளும் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சி அலையை உருவாக்கி உள்ளது.. இதுபோன்ற சம்பவங்களை கண்டித்து மாநில மனித உரிமை ஆணையம் தலையிடும் அளவிற்கு காவல்துறையின் நடவடிக்கைகள் பெரும் விமர்சனங்களுக்கு உள்ளாகியும் உள்ளன.

திரிபாதி

திரிபாதி

இந்த நிலைமையை சீர் செய்வதற்காகத்தான், "இனிமேல் இப்படியெல்லாம் செய்யக்கூடாது" என்று தமிழக காவல்துறை தலைவர் திரிபாதி உத்தரவுப்படி, தமிழகம் முழுவதும் உள்ள கொரோனா தடுப்பு பாதுகாப்பு பணியில் இருக்கும் போலீசாருக்கு, ஒரு சுற்றறிக்கையும் அனுப்பப்பட்டது.. இந்த சமயத்தில்தான் ஊரடங்கில் சில தளர்வுகளும் பிறப்பிக்கப்பட்டன.. இதனால் பெருமளவு பொதுமக்கள் சகஜகமாக நடமாட ஆரம்பித்துள்ளனர்.. திறக்கப்பட்ட கடைகளுக்கு இவர்கள் வந்து பொருட்களை வாங்கி கொண்டும் செல்கின்றனர்.

மளிகை கடை

மளிகை கடை

இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் நேரு சாலையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.. அங்குள்ள மெடிக்கல் ஷாப், ஹோட்டல், மளிகை கடைகளுக்கு பொதுமக்கள் பைக்கில் வந்திருக்கிறார்கள்.. அப்போது தங்களது பைக்குகளை ரோட்டின் ஓரமாக நிறுத்திவிட்டு பொருட்களை வாங்க சென்றுள்ளனர்.. அந்த நேரத்தில், திண்டிவனம் சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்மணி என்பவர், அங்கிருந்த பைக்குகளை ஒவ்வொன்றாக பஞ்சர் செய்து கொண்டிருந்தார்.

பைக்குகள்

பைக்குகள்

இதை பற்றி எந்த முன்னறிவிப்பையும் அவர் யாருக்குமே தரவில்லை.. பைக்குகளின் டயரை ஆணியை வைத்தும், கல்லால் அடித்தும் பஞ்சர் செய்து கொண்டு இருப்பதை பார்த்ததும் அந்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்... அவர் பஞ்சர் செய்த வண்டிகளில் திண்டிவனம் கோர்ட் நீதிபதியின் வண்டியும் ஒன்று... எந்தவித சட்ட விதிகளையும் பின்பற்றாமல், திரிபாதியின் உத்தரவையும் மதிக்காமல், டயரை ஆணி வைத்து பஞ்சர் செய்துள்ளார் தமிழ்மணி.

ஜட்ஜ்

ஜட்ஜ்

இறுதியில்தான் நீதிபதியின் வண்டியும் அதில் இருந்தது தெரிந்து அலறி அடித்து கொண்டு ஜட்ஜ் ஐயாவை வந்து சந்தித்துள்ளார்.. மேலிடத்தில் இதை பற்றி புகார் சொன்னால் நடவடிக்கை பாயும் என்ற கிலியில், தமிழ்மணியும் திண்டிவனம் இன்ஸ்பெக்டர் மூர்த்தியும் நீதிபதியை சந்தித்து மன்னிப்பு கேட்டனர்.

Recommended Video

    Fake Tasmac Token : டோக்கனை கலர் ஜெராக்ஸ் எடுத்து வந்து, மது வாங்க முயற்சி செய்த குடிகாரர்கள்
    கவலை - கோரிக்கை

    கவலை - கோரிக்கை

    டயர்கள் பஞ்சர் ஆன விஷயம் இதோடு முடிந்துவிட்டாலும், அந்த பகுதி மக்கள் இன்னமும் அதிர்ச்சியில்தான் உள்ளனர்.. 50 நாளாக வருமானம் இல்லாமல் அவதிப்பட்டு வந்துள்ள நிலையில், இப்படி டயரை கிழித்து வைத்தால் என்ன செய்வது என்று கேட்கிறார்கள்? அதுமட்டுமில்லை... "வயசு வித்தியாசம் பார்க்காமல், யாராக இருந்தாலும், மைக்கில் "ஏன்டா இங்க நிக்கிற? வண்டி எடுடா" என்று ஒருமையில் பேசி லத்தியால் அடித்து விரட்டுகிறாராம் தமிழ்மணி.. அதனால் துறைரீதியான நடவடிக்கை எடுத்தால் நல்லா இருக்கும் என்கிறார்கள் பொதுமக்கள்!

    English summary
    lockdown: vehicles tiers Puncher near tindivanam case issue
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X