Mayanakollai: காளி, அங்காளம்மன், காட்டேரி வேடமிட்டு மயானக் கொள்ளை திருவிழா.. கோலாகல கொண்டாட்டம்

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: தமிழகம் முழுவதும் மாசி அமாவாசை தினமான இன்று மயானக் கொள்ளை திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. குறிப்பாக வடதமிழகப் பகுதிகளான வேலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள ஏராளமான அங்காளம்மன் கோயில்கில் இந்த மயானக் கொள்ளைத் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

மயானக் கொள்ளை என்பது மனிதனின் ஆணவத்தை கடவுள் அழிப்பதைக் குறிப்பதாகும். தீய சக்திகளிடமிருந்து அனைத்து உயிர்களையும் காப்பாற்றுவதற்கும், விவசாயம் செழிக்கவும் மயானக் கொள்ளைத் திருவிழா ஒவ்வொரு கிராமப் புறப்புறங்களிலும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

MayanaKollai Festival

மயானக் கொள்ளைத் திருவிழா

வடதமிழகத்தில் இந்த மயானக் கொள்ளைத் திருவிழா ஆண்டுதோறும் மகா சிவராத்திரிக்கு மறுநாள் வரும் மாசி அமாவாசை தினத்தன்று வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில்களில் இந்த விழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவின் போது, பக்தர்கள் ஏராளமானோர் பல்வேறு உக்கிரமான வேடங்களை அணிந்து வருவது வழக்கம்.

காளி, அங்காளம்மன், காட்டேரி என பல்வேறு உக்கிர வேடங்களை அணிந்து கொண்டு ஆக்ரோஷமாக நடனமாடி ஊர்வலமாக மயானத்தை நோக்கிச் செல்வார்கள். இந்த ஊர்வலத்தின்போது, பக்தர்கள் தானியங்கள், பழங்கள், சுண்டல் போன்றவற்றை செல்லும் இடங்களில் எல்லாம் இட்டுச் செல்வார்கள். இதனை பொதுமக்கள், பக்தர்கள் போட்டி போட்டுக் கொண்டு சேகரித்துச் செல்வார்கள்.

வறுமை, நோய் நீங்கும்

இவ்வாறு கொள்ளை இட்டுச் செல்வதால் தங்களுடைய குடும்பத்தின் வறுமை, நோய் போன்றவை நீங்கும் என்பது ஐதீகம். தமிழகத்தில் குறிப்பாக வடதமிழகத்தில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில்கள் அதிகளவில் உள்ளன. வேலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள ஏராளமான அங்காளம்மன் கோயில்கில் இந்த மயானக் கொள்ளைத் திருவிழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+