விழுப்புரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பெண்கள் அம்மியில் அரைத்தால் ஜிம்மிற்கு செல்லவே தேவையில்லை! அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேச்சு!

Google Oneindia Tamil News

விழுப்புரம்: பெண்கள் அம்மியில் அரைத்தால் ஜிம்மிற்கு செல்லவே தேவையில்லை என அமைச்சர் செஞ்சி மஸ்தான் அறிவுரை வழங்கியுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் இறையானூரில் பாரம்பரிய பன்முக கண்காட்சியை தொடங்கி வைத்து பேசிய அவர் இதனைக் கூறினார்.

அமைச்சர் செஞ்சி மஸ்தானின் அறிவுரை சிரிக்க வைக்க மட்டுமல்லாமல் சிந்திக்கவும் வைத்ததால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அவருக்கு பாராட்டு தெரிவித்தனர்.

“ஹரே பாய்.. திருச்சி வராம..” - அமைச்சர் செஞ்சி மஸ்தான் பற்றி கே.என்.நேரு பேச்சால் சிரிப்பலை! “ஹரே பாய்.. திருச்சி வராம..” - அமைச்சர் செஞ்சி மஸ்தான் பற்றி கே.என்.நேரு பேச்சால் சிரிப்பலை!

உடல் உழைப்பு

உடல் உழைப்பு

வீடு சுத்தம் செய்வது முதல் மாவு ஆட்டுவது, துணி துவைப்பது என சகல விதமான வீட்டுப்பணிகளுக்கும் புது புது இயந்திரங்கள் வந்துவிட்டன. பாத்திரம் கழுவுவதற்கு கூட இயந்திரங்கள் வந்துவிட்ட காலம் இது. இதனால் பெண்களுக்கு உடல் உழைப்பு குறைந்து உடல் பருமன் உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இதனை களைவதற்கு ஜிம்மிற்கு செல்ல ஆரம்பித்துள்ளதுடன் உடற்பயிற்சியும் செய்ய ஆரம்பித்துள்ளார்கள் பெண்கள்.

சிந்திக்க சிரிக்க

சிந்திக்க சிரிக்க

இந்நிலையில் பாரம்பரிய முறைப்படி பெண்கள் வீட்டுப் பணிகளை செய்தால் அவர்களுக்கு எந்த உடல் பிரச்சனைகளும் வராது எனக் கூறியிருக்கிறார் அமைச்சர் மஸ்தான். விழுப்புரம் மாவட்டம் இறையானூரில் வேளான் அறிவியல் ஆராய்ச்சி மையத்தில் நடைபெற்ற பாரம்பரிய பன்முக கண்காட்சியை தொடங்கி வைத்து பேசிய அவர் இதனைக் கூறினார். பெண்கள் அம்மியில் அரைத்தால் ஜிம்மிற்கு செல்லவே தேவையில்லை என அவர் கூறிய அறிவுரையை கேட்டவர்கள் சிரித்ததோடு சிந்திக்கவும் செய்தார்கள்.

பச்சைத் துண்டு

பச்சைத் துண்டு

பாரம்பரிய பன்முக கண்காட்சியை தொடங்கி வைக்கச் சென்ற அமைச்சர் மஸ்தானுக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பச்சைத் துண்டு அணிவித்து கவுரவித்தனர். அந்த பச்சைத் துண்டை கழுத்தில் இருந்து கழற்றாமல் கடைசி வரை அதை அணிந்துகொண்டே அமர்ந்திருந்த அமைச்சர் மஸ்தானை பார்த்து மாவட்ட ஆட்சியர் உட்பட அதிகாரிகளும் பச்சைத் துண்டை கழுத்தில் இருந்து அகற்றாமல் போட்டுக்கொண்டனர்.

 பாரம்பரிய பொருட்கள்

பாரம்பரிய பொருட்கள்

விவசாயப் பணிகளுக்கு பாரம்பரிய முறைப்படி பயன்படுத்தப்பட்ட ஏர் கலப்பை உள்ளிட்ட சாதனங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமாரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Minister Gingee Masthan has advised that women do not need to go to the gym if they grind on Ammi
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X