கட்சிப் பதவியை பறித்த ஸ்டாலின்.. வாடிய முகத்துடன் வந்த பொன்முடி.. வீட்டின்முன் குவிந்த ஆதரவாளர்கள்!
விழுப்புரம்: திமுக துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து அமைச்சர் பொன்முடி நீக்கப்பட்டிருப்பதாக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து வாடிய முகத்துடன் வீட்டில் இருந்து வெளி வந்த பொன்முடி, உடனடியாக சென்னைக்கு புறப்பட்டுள்ளார். அப்போது வீட்டின் முன் குவிந்த ஆதரவாளர்கள் அவருக்கு ஆறுதல் கூறினர்.
மகளிர் மற்றும் இந்து மதம் தொடர்பாகவும் அமைச்சர் பொன்முடி சர்ச்சையான கருத்துகளை தெரிவித்திருந்தார். இந்த கருத்துக்கு பாஜக உட்பட பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். அதேபோல் திமுக எம்பி கனிமொழியும் பொன்முடிக்கு கண்டனம் தெரிவித்தார். இந்த நிலையில் திமுகவின் துணைப் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து பொன்முடி நீக்கப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

அவருக்கு பதிலாக எம்பி திருச்சி சிவா துணை பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், கழக துணைப் பொதுச்செயலாளர் பொன்முடி வகித்து வரும் துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
இது திமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த தகவல் வெளியான அடுத்த சில நிமிடங்களிலேயே அமைச்சர் பொன்முடியின் ஆதரவாளர்கள் அவரின் வீட்டிற்கு முன் குவிந்தனர். அதுமட்டுமல்லாமல் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் பொன்முடியை அமைச்சர் என்று குறிப்பிடாததால், அவர் விரைவில் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் பதவி பறிக்கப்பட்ட பின் திமுக நிர்வாகிகளுடன் தனது வீட்டில் அமைச்சர் பொன்முடி ஆலோசனையில் ஈடுபட்டார். அதனைத் தொடர்ந்து சென்னை புறப்படுவதற்காக வெளி வந்த பொன்முடி முகம் வாடிய முகத்துடன் காணப்பட்டார். இதன்பின் காரில் ஏறி சென்னைக்கு புறப்பட்ட போது, அவரது ஆதரவாளர்கள் அவருக்கு ஆறுதல் கூறினர்.
ஏற்கனவே அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பொதுச்செயலாளர் துரைமுருகன் மற்றும் பொருளாளர் டிஆர் பாலு ஆகியோர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆலோசனைக்கு பின் பொன்முடி மீதான அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ! -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா












Click it and Unblock the Notifications