அண்ணாத்த ஆடுறார்.. ஒத்திக்கோ.. ஒத்திக்கோ.. சிலம்பம் சுற்றிய அமைச்சர் செஞ்சி மஸ்தான்!
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் சிலம்பம் விளையாடி அசத்தியிருக்கிறார்.
Recommended Video
முறையாக சிலம்பம் கற்றுக்கொண்டவரை போல் சுற்றி சுற்றி அவர் சிலம்பம் ஆடியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
அமைச்சர் செஞ்சி மஸ்தானுக்கு 66 வயதாகும் நிலையில் 16 வயது இளைஞர் போல் அவரிடமிருந்த சுறுசுறுப்பு கவனிக்கத்தக்கது.

செஞ்சி தர்ஹா
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் உள்ள ஹஜ்ரத் சையது பாவா வலியுல்லா தர்காவில் சந்தனக் கூடு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், அங்கு நடைபெற்ற துஆவில் கலந்துகொண்டார். அதைத் தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்ட அவர் அங்கு நடைபெற்ற சிலம்பாட்ட நிகழ்வை பார்வையிட்டார்.

சிலம்பம் விளையாட்டு
பிறகு தானும் கையில் கம்புடன் சிலம்பம் சுற்ற ஆரம்பித்தார். சிலம்பம் கற்ற வீரருக்கே டஃப் கொடுக்கும் வகையில் சுற்றி சுற்றி சுழன்றடித்தார் அமைச்சர் செஞ்சி மஸ்தான். அமைச்சர் சிலம்பம் ஆடும் தகவலறிந்து தர்காவில் திரண்டிருந்த இஸ்லாமியர்கள் அனைவரும் அதனை காண திரண்டனர். கரவொலி எழுப்பியும், ஆரவாரம் செய்தும் அமைச்சர் செஞ்சி மஸ்தானுக்கு அவர்கள் உற்சாகம் அளித்தனர்.

அமைச்சர் செஞ்சி மஸ்தான்
அமைச்சர் செஞ்சி மஸ்தானை பொறுத்தவரை தேநீர் கடை நடத்தி படிப்படியாக அரசியலில் முன்னேறியவர் என்பதால் எப்போதுமே தன்னை ஒரு எளிமைவாதியாக காட்டிக்கொள்வார். கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் தமிழக ஹஜ் பயணிகளுக்கான உணவு ஏற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக கேரள மாநிலம் கொச்சின் சென்ற அவர், அங்கு அப்பளம் சுடுவது, பாத்திரம் கழுவுவது என அனைத்துப் பணிகளிலும் தன்னை ஈடுபடுத்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

66 வயது
சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தானுக்கு 66 வயதாகிறது. தனக்கு வயதானாலும் தன்னை எப்போதுமே ஒரு இளைஞராக காட்டிக் கொள்ளக் கூடியவர். அதன் வெளிப்பாடாக தான் இது போன்ற நிகழ்வுகள் அமைந்துள்ளன.
-
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
ஏஐ மூலம் கலைஞர், விஜய் போன்ற தலைவர்களை அசிங்கமாக சித்தரிப்பதா? குரல் எழுப்பும் சிபிஐ! -
வைகோ வருத்தப்பட போறாரு.. நிர்வாகிகளை தட்டித் தூக்கும் திமுக! ஆர்டர் போட்ட ஸ்டாலின்! துரை தான் பாவம்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால் -
உள்ளாட்சி தேர்தலில் வாங்க பார்த்துக்கிறோம்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு சவால் விட்ட அனிதா ராதாகிருஷ்ணன் -
“திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம்.. தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு”.. CPI வீரபாண்டியன் உறுதி! -
ஒதுங்கும் துரைமுருகன்.. திமுகவின் புதிய பொதுச்செயலாளராகிறாரா ஆ.ராசா? உதயநிதி ஸ்டாலினும் ஆதரவாம்! -
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
“தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளார் ராகுல்..” முரசொலி சரமாரி விமர்சனம்! -
ஒரு மேயர் ஜெயித்தாலும் ஒருபக்க மீசையை எடுக்கிறேன்.. தவெகவிற்கு சவால் விட்ட திமுகவின் ஆர்எஸ் பாரதி -
உதயநிதியின் தவறுக்கான தண்டனைதான்.. திமுகவின் தோல்வி! ராகுல் காந்தியை இழுக்காதீங்க - மாணிக்கம் தாகூர்












Click it and Unblock the Notifications