மிஸ் கூவாகம் அழகிப் போட்டி.. முதல் 3 இடங்களை பிடித்த தருமபுரி நபீஸா, கோவை மடோனா, பவானி ருத்ரா!
Recommended Video
விழுப்புரம்: திருநங்கைகளுக்கான அழகிப் போட்டியில் தருமபுரியை சேர்ந்த நபீஸா மிஸ் கூவாகமாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே கூவாகம் கிராமத்தில் புகழ்பெற்ற கூத்தாண்டவர் கோவிலில் கடந்த 2-ம் தேதி சாகை வார்த்தல் நிகழ்ச்சியில் இருந்து இந்த சித்திரை திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது.இதில் பல்வேறு மாநிலங்களில் இருந்து, ஆயிரக்கணக்கானோர் வந்துள்ளனர்.
இந்நிலையில் இன்று திருநங்கைகளுக்கான மிஸ் கூவாகம் அழகிப் போட்டி விழுப்புரம் நகராட்சி மைதானத்தில் நடைபெற்றது.

தொடக்கம்
இந்த நிகழ்ச்சியை தென்னிந்திய திருநங்கைகள் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம், மாவட்ட சமூக நலத்துறை ஆகியவை இணைந்து நடத்தின. விழுப்புரம் நகர துணை போலீஸ் கண்காணிப்பாளர் திருமால், குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

72 தலைவிகள்
இந்த நிகழ்ச்சிக்கு தென்னிந்திய திருநங்கைகள் கூட்டமைப்பை சேர்ந்த 72 தலைவிகள் முன்னிலை வகித்தனர். முதல்கட்டமாக நடனப் போட்டிகள் நடைபெற்றன.

பேஷன் ஷோ
பின்னர் ‘பேஷன் ஷோ' நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து மிஸ் கூவாகம் அழகிப் போட்டி நடைபெற்றது. இதில் 15 திருநங்கைகள் பங்கேற்றனர். முதல் சுற்றில் 36 பேர் தேர்வாகினர்.

3 பேர் தேர்வு
2ஆம் சுற்றில் 15 பேர் தேர்வு செய்யப்பட்டனர். 3வது சுற்றில் எய்ட்ஸ் விழிப்புணர்வு மற்றும் பொது அறிவுத்திறன் தொடர்பான கேள்விகள் கேட்கப்பட்டு, முதல், இரண்டாம், மூன்றாம் இடத்திற்கு திருநங்கைகள் தேர்வு செய்யப்பட்டனர்.

2-ஆவது இடம் கோவை
அதில் இந்த ஆண்டுக்கான மிஸ் கூவாகமாக தருமபுரியை சேர்ந்த நபீஸா முதலிடத்தையும், கோவை மடோனா இரண்டாவது இடத்தையும், பவானி பகுதியை சேர்ந்த ருத்ரா மூன்றாவது இடத்தையும் பிடித்தனர். இவர்களுக்கு கிரீடம் அணிவிக்கப்பட்டு பரிசு வழங்கப்பட்டது.












Click it and Unblock the Notifications