Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விழுப்புரம் மகேஸ்வரிக்கு பல ஆண் நண்பர்கள்.. வந்து நின்ற பழைய காதலன்.. அடுத்து நடந்த பெரிய ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் ஹைவேஸில் கிடந்த பெண்ணின் சடலம் பெரும் அதிர்வலையை அம்மக்களிடம் ஏற்படுத்தி வருகிறது. இந்த கொலை தொடர்பாக போலீசார் தீவிரமான விசாரணையை மேற்கொண்டனர்.. அப்போதுதான், அந்த பெண் யார்? அவரது பின்னணி என்ன? என்பது தெரிந்துள்ளது.. சம்பந்தப்பட்ட குற்றவாளியை கைது செய்து அவரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

திண்டிவனம் அடுத்துள்ள ஓமந்தூர் பகுதியில் உள்ள புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில், சுமார் 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சடலமாக கிடப்பதாக கிளியனூர் போலீசுக்கு தகவல் கிடைத்தது.

Villupuram Maheswari Tindivanam

விழுப்புரம் ஹைவேஸ்

இந்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அந்த பெண்ணின் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். பெண்ணின் உடல் அழுகி காணப்பட்டது.. மேலும் அந்த உடலில் பலத்த காயங்கள் இருந்ததை பார்த்த போலீசார், இது விபத்து அல்ல, திட்டமிட்ட கொலை என்று சந்தேகப்பட்டனர். இதனால் தீவிர விசாரணையை தொடங்கினர்.

போலீசார் நடத்திய விசாரணையில் உயிரிழந்த பெண், மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த 46 வயது மகேஸ்வரி தெரியவந்தது. மகேஸ்வரிக்கு ஏற்கனவே 2 கல்யாணம் நடந்து, 2 கணவர்களையும் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தது தெரியவந்தது..

2 கணவர்கள், காதலன்

ஆனால் 2 திருமணங்களுக்கு முன்பேயே மகேஸ்வரி, கண்ணன் (52) என்பவரை காதலித்து பழகியுள்ளார். இதனால் மகேஸ்வரி கர்ப்பம் அடைந்து விட்டாராம்.. பிறகு சில காரணங்களால் காதலர்கள் இருவரும் பிரிந்துவிட்டனர். இதற்கு பிறகுதான் மகேஸ்வரிக்கு திருமணம் நடந்துள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு, பழைய காதலர்கள் மீண்டும் சந்தித்து கொண்டனர்.. பழைய காதல் தங்களுக்குள் புதுப்பித்து கொண்டுள்ளனர்.. சென்னையை சேர்ந்த கண்ணன், தற்போது லாரி டிரைவராக பணிபுரிந்து வருகிறார்..

பல ஆண் நண்பர்கள்

கண்ணனுக்கும் ஏற்கனவே திருமணமாகி மூன்று மகள்கள் உள்ளனர். இதையெல்லாம் தெரிந்தும் மகேஸ்வரியுடன் அவர் மீண்டும் நெருக்கமாக பழகி வந்துள்ளார்.

இந்த பழக்கம் நாளடைவில் திருமணத்திற்கு மீறிய உறவாக மாறி, இருவரும் தனியாக வீட்டை வாடகைக்கு எடுத்து ஒன்றாக வசித்து வந்துள்ளனர்.. ஆனால், மகேஸ்வரி பணத்திற்காக பல ஆண்களுடன் நெருக்கமாக பழகியிருக்கிறார்.. இந்த விஷயம் கண்ணனுக்கு தெரிந்து கேள்வி கேட்டுள்ளார்.. இதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

புதுப்பிக்கப்பட்ட பழைய காதல்

சம்பவத்தன்று, கண்ணன் மகேஸ்வரியை தன்னுடைய லாரியில் செங்கல்பட்டு அருகே உள்ள படாளம் பகுதிக்கு அழைத்து சென்றிருக்கிறார்.. அங்கு 2 பேரும் சேர்ந்து ஒன்றாக மது அருந்தியுள்ளனர். மது போதையில் ஏற்பட்ட வாக்குவாதம் கடுமையாக மாறியதில், ஆத்திரமடைந்த கண்ணன் மகேஸ்வரியை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

தங்க சங்கிலி, தங்கக் கம்மல்

இதனைத் தொடர்ந்து, கண்ணன் எந்த சலனமுமின்றி, மகேஸ்வரி அணிந்திருந்த தாலி சங்கிலி, கம்மல்களை கழற்றிக் கொண்டு, அவரது உடலை திண்டிவனம் அருகே தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் வீசிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளது விசாரணையில் தற்போது தெரியவந்துள்ளது.. இதையடுத்து, வானூர் அருகே தலைமறைவாக இருந்த கண்ணனை, தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட கண்ணனிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் திண்டிவனம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிக்கு சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி தெரிவித்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+