செதில் செதிலா "உரிந்த" தோல்.. கண்ணீர் புலம்பல்.. காதலியிடம் கிறங்கி விழுந்த கணவன்.. கடைசிவரை அடங்கலயே
விழுப்புரம்: இப்பவெல்லாம், கள்ளக்காதல் விவகாரத்தில் தகராறுகள் ஏற்பட்டால், தங்கள் கோபத்தை சாப்பாட்டில்தான் காட்டுகிறார்கள்.. முதல்ல முள்ளங்கி சாம்பார்.. இப்ப குழம்பு..
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்துள்ளது இலங்கியனூர் என்ற கிராமம்.. இந்த கிராமத்தில் வசித்த தம்பதி சுப்பிரமணியன் - கொளஞ்சியம்மாள்.. இவர்களது 40 வயது மகன் வேல்முருகன்..

மனைவி பெயர் கீதா.. 33 வயதாகிறது.. இவர்களுக்கு அகிலேஷ்வர் என்ற 12 வயது மகனும், சரவணகிருஷ்ணன் என்ற 6 வயது மகனும் உள்ளனர்.. வேல்முருகன் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்திருக்கிறார். இந்நிலையில், கீதாவுக்கு அதே கிராமத்தை சேர்ந்த ஹரிஹரன் என்பவருடன் தொடர்பு இருந்துள்ளது.. இந்த விஷயம் மாமியாருக்கு தெரிந்து மருமகளை கண்டித்துள்ளார். ஆனால், கீதா தன்னுடைய கள்ளக்காதலை கைவிடவில்லை.. மேலும், தினமும் கண்டித்து கொண்டிருக்கும் மாமியார், மாமனாரையும் கொலை செய்ய முடிவு செய்தார்.
இதற்காக, கடந்த 2021 டிசம்பர் 29ம் தேதி, முள்ளங்கி சாம்பார் வைத்து, அதில், எலி பேஸ்ட்டை கலந்துள்ளார்.. இந்த எலி பேஸ்ட்டை கள்ளக்காதலன் ஹரிஹரன் வாங்கி வந்து கீதாவிடம் தந்துள்ளார்.. அனைவருக்கும் சாப்பாடு பரிமாறிஉள்ளார் கீதா.. மாமனார், மாமியார் ஆகியோர் சாப்பிட்டுள்ளனர்.. சாப்பிடும் நேரத்தில் பக்கத்து வீட்டு சிறுவன் வந்துவிட்டதால், அவனுக்கும் சேர்த்து சாப்பாடு போட சொன்னார்களாம். அதனால், பக்கத்து வீட்டு சிறுவனுக்கும் அதே முள்ளங்கி சாம்பாரை ஊற்றினார் கீதா..
மயக்கம்:
கொஞ்ச நேரத்தில், வாந்தி, பேதி, மயக்கம் ஏற்படவும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், 3 பேருமே இறந்துவிட்டனர்.. ஓய்வுபெற்ற சப்இன்ஸ்பெக்டரின் மகள்தான் கீதா.. அதனால், கொலை நடந்த ஒன்றரை வருட காலம் ஆகியும், சிக்காமல் இருந்தவர், இப்போது போலீசில் கள்ளக்காதலனுடன் சிக்கி உள்ளார்.. இந்த சம்பவத்தின் அடங்குவதற்குள் இன்னொரு சம்பவம் விழுப்புரத்தில் நடந்துள்ளது..
பெரிய நாயகி:
திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ளது தடுத்தாட்கொண்டூர் என்ற கிராமம். இந்த கிராமத்தில் வசித்து வருபவர் ஆரோக்கியசாமி. மனைவி பெயர் பெரிய நாயகி... ஆரோக்கியசாமிக்கு அதே பகுதியில் வசித்து வரும் ஒரு பெண்ணுடன் கள்ள உறவு இருந்து வந்திருக்கிறது. இந்த விஷயம் பெரிய நாயகிக்கு தெரியவந்துள்ளதும், அதிர்ந்து போனார்.. அதனால், சம்பந்தப்பட்ட பெண்ணை தேடி போனார் பெரிய நாயகி.. இப்படியெல்லாம் பழகுவது தவறு என்றும், தன்னுடைய கணவனை விட்டு போய்விடும்படியும் கெஞ்சியிருக்கிறார்.
ஆரோக்கியசாமியிடமும் இதுகுறித்து வாதம் செய்திருக்கிறார்.. அந்த பெண்ணுடன் பழகுவதை நிறுத்தும்படி சொல்லி உள்ளார்.. ஆனாலும், பெரிய நாயகியின் கண்ணீரை கண்டுகொள்ளாமல், இந்த கள்ளஜோடி தொடர்ந்து பழகி வந்துள்ளது.. ஒருகட்டத்தில், இந்த ஜோடியின் அட்டகாசம் அதிகமாகவும், திருவெண்ணெய்நல்லூர் போலீசில் கணவர் மீது புகார் அளித்திருக்கிறார் பெரிய நாயகி. போலீசாரும், 2 பேரையும் சமாதானமாக போகும்படி அறிவுறுத்தி அனுப்பி வைத்திருக்கிறார்கள்.
மட்டன் குழம்பு:
இந்நிலையில் நேற்று மறுபடியும் கள்ளக்காதலி வீட்டுக்கு சென்று வந்துள்ளார் ஆரோக்கியசாமி.. இந்த விஷயம் பெரியநாயகி மேலும் ஆத்திரம் அடைந்தார்.. இவ்வளவு தூரம் போலீசார் அறிவுரை சொல்லி அனுப்பியும், அங்கே எப்படி போகலாம்? என்று கேட்டுள்ளார்.. இதுவே தகராறாக வெடித்துள்ளது.. ஒரு கட்டத்தில் உச்சக்கட்ட கோபமடைந்த ஆரோக்கியசாமி, அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்த குழம்பை எடுத்து வந்து, பெரிய நாயகி மீது ஊற்றிவிட்டார்..
இதனால், வலியால் பெரியநாயகி அலறி துடித்துள்ளார்.. அந்த சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து, அவரை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்..
வலியால் அலறல்:
இதற்கு பிறகு போலீசாருக்கு தகவல் தரப்படவும், அவர்கள் மருத்துவமனைக்கு விரைந்து சென்று, பெரிய நாயகியிடம் விசாரித்துள்ளனர்.. பெரியநாயகியிடம் நடந்த சம்பவம் குறித்து வாக்குமூலம் தந்துள்ளார்.. இதன் அடிப்படையில் விசாரணையும் துரிதமாக துவங்கி உள்ளது.. உடம்பெல்லாம் வெந்துபோய், ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று கொண்டிருக்கிறார் பெரிய நாயகி..!!
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications