விக்கிரவாண்டி திமுக வேட்பாளராக நா புகழேந்தி.. ஸ்டாலின் அறிவிப்பு
Recommended Video
சென்னை: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக நா புகழேந்தி அறிவிக்கப்பட்டுள்ளார்.
நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய சட்டசபை தொகுதிகளில் அக்டோபர் 21-ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரு தொகுதிகளில் நாங்குநேரி கூட்டணி கட்சியான காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
விக்கிரவாண்டியில் திமுக போட்டியிடுகிறது. இந்த நிலையில் விக்கிரவாண்டி தொகுதியில் நேற்று திமுக சார்பில் விருப்ப மனு பெறப்பட்டது. இன்றைய தினம் வேட்பாளர் நேர்காணல் நடைபெற்றது.

புகழேந்தி
அப்போது விக்கிரவாண்டி தொகுதியின் திமுக வேட்பாளராக நா புகழேந்திக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதை திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்தார்.

1973-ஆம் ஆண்டு முதல்
விக்கிரவாண்டி தொகுதியை சேர்ந்தவர் நா புகழேந்தி. இவருக்கு வயது 66. விவசாயத் தொழில் செய்து வருகிறார். கடந்த 1973-ஆம் ஆண்டு முதல் திமுகவில் இருந்து வருகிறார். அப்போது அவருக்கு திமுக மாவட்ட கிளை செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது.

மத்திய மாவட்ட பொருளாளர்
இதையடுத்து 1986-ஆம் ஆண்டு மாவட்ட பொதுக் குழு உறுப்பினராகவும் இருந்துள்ளார். மாவட்ட விவசாய அணி செயலாளராக இருந்துள்ளார். 3 முறை விக்கிரவாண்டி ஒன்றிய கழக செயலாளராக இருந்துள்ளார். தற்போது மத்திய மாவட்ட கழக பொருளாளராக இருந்து வருகிறார்.

வாய்ப்பு
இவர் முரசொலி நாளிதழுக்காக ரூ 55 லட்சம் சந்தா வசூலித்து கொடுத்துள்ளார். முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு மிகவும் நெருக்கமானவர். இவர் கடந்த 2016-ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டார்.

மரணம்
ஆனால் அவருக்கு பதிலாக ராதாமணிக்கு அந்த வாய்ப்பு வழங்கப்பட்டு அவர் வெற்றி பெற்றார். இந்த நிலையில் உடல் நல பாதிப்பு காரணமாக ராதாமணி உயிரிழந்ததை அடுத்து விக்கிரவாண்டிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.
|
முன்கூட்டியே கூறிய தமிழ் ஒன் இந்தியா
முன்பு வாய்ப்பு மறுக்கப்பட்ட புகழேந்தியின் விருப்பமனு இன்று நேர்காணலில் முதலிடத்தில் இருந்தது. இந்த நிலையில் புகழேந்தி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர்தான் வேட்பாளராக அறிவிக்கக் கூடும் என நேற்றைய தினமே தமிழ் ஒன் இந்தியா தளம் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்!












Click it and Unblock the Notifications