விக்கிரவாண்டியில் திமுக வேட்பாளராக மாவட்ட பொருளாளர் புகழேந்திக்கு வாய்ப்பு?
Recommended Video
சென்னை: விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக அக்கட்சியின் மாவட்ட பொருளாளர் புகழேந்திக்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்.எல்.ஏ.வாக இருந்த ராதாமணி மரணமடைந்ததால் அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இத்தொகுதியில் அக்டோபர் 21-ல் வாக்குப் பதிவு நடைபெறும். அக்டோபர் 24-ல் வாக்குகள் எண்ணப்படுகின்றன.
விக்கிரவாண்டி தொகுதியில் மீண்டும் திமுகவும் அதிமுகவும் மோதுகின்றன. இரு கட்சிகளுமே விருப்ப மனுக்களைப் பெற்று வருகின்றன.

திமுகவில் விழுப்புரம் மத்திய மாவட்ட பொருளாளர் புகழேந்தி, விக்கிரவாண்டி ஜெயச்சந்திரன் இருவரும் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என நம்பிக்கையில் உள்ளனர். இவர்களில் புகழேந்திக்கு வாய்ப்பு அதிகம் கிடைக்கும் என்றும் அவர் வெற்றி பெறுவது எளிதானதாகவும் இருக்கும் என்கின்றனர் திமுக நிர்வாகிகள்.
திமுகவினரைப் பொறுத்தவரையில், அதிமுக போட்டியிடுவதால் பாமக களத்துக்கு வராது; அப்படி வந்தாலும் சமாளித்துவிடுவோம். அதனால் எளிதாக எங்களால் வெல்ல முடியும் நம்பிக்கையை வெளிப்படுத்துகின்றனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications