உறவு வைத்த பிறகு நடந்த சம்பவம்.. முத்துக்குமரன் மீது போலீஸில் புகார் கொடுத்த இன்ஸ்டா பிரபலம்
சென்னை: பிக் பாஸ் முத்துக்குமரன் பற்றி இன்ஸ்ட்டா பிரபலம் வாஹதா தொடர்ந்து வீடியோவை வெளியிட்டுக் கொண்டே இருக்கிறார். சில மாதங்களுக்கு முன்பு தற்கொலை முயற்சி செய்த அந்த பெண் தன்னுடைய இந்த முடிவுக்கு காரணம் முத்துக்குமரன் தான் என்று வீடியோ வெளியிட்டு இருந்தார். பிறகு அதை டெலிட் செய்து விட்டார். இப்படி இருக்கும் போது இப்போது அவர் முத்துக்குமரன் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று (நவம்பர் 16) புகார் கொடுத்திருக்கிறார்.
தனது வழக்கறிஞர் பிரியதர்ஷினியுடன் சென்னை காவல் ஆணையத் அலுவலகத்தில் புகார் கொடுத்துவிட்டு வெளியே வந்த வாஹதா செய்தியாளர்களை சந்தித்து பேசி இருந்தார். இத்தனை நாட்களாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலேயே தொடர்ந்து வீடியோக்கள் வெளியிட்டு வந்த அவர் முதல் முறையாக செய்தியாளர்களை சந்தித்து பேசி இருக்கிறார். அப்போது அவர் பேசுகையில், கடையநல்லூர் விவகாரம் தொடர்பாக எனக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறி இன்ஸ்டாகிராம் மூலமாகத்தான் முத்துக்குமரன் எனக்கு மெசேஜ் அனுப்பி பழக தொடங்கினார்.
வாஹதா கொடுத்த புகார்
முதல் இரண்டு முறை நாங்கள் சாதாரணமா சந்தித்து பேசி இருந்தோம். அதற்கு பிறகு உன்னை பிடித்திருக்கிறது, தாலி கட்டி திருமணம் செய்து கொள்கிறேன் என்று பொய்யான வாக்குறுதி கொடுத்து காதல் என்ற பெயரில் பழகினார். மூன்றாவது முறையாக நாங்கள் எதார்த்தமாக சந்தித்தோம். அந்த சமயத்தில் தான் நான் ஏற்கனவே சொன்ன மாதிரி எங்களுக்குள் பிசிக்கல் உறவு ஏற்பட்டது என்று கூறினார். மேலும், சம்பந்தப்பட்ட அந்த நாளில் நான் அவர் வீட்டுக்கு முதலில் வரவில்லை என்றுதான் சொன்னேன். ஆனால் அவர்தான் எனக்கு நம்பிக்கை கொடுத்து வீட்டிற்கு கூப்பிட்டார்.
பிறகு அங்கு நான் போனதும் மது ஊற்றிக் கொடுத்து குடிக்க வற்புறுத்தியதுடன் பொய்யான திருமண ஆசை காட்டி என்னுடன் உடல் ரீதியாக உறவு வைத்துக் கொண்டார். அதற்கு பிறகு திருமணம் செய்து கொள்ள தயாராக இல்லை என்று சொல்லி தொடர்பை துண்டித்து விட்டார். இதனால் தான் நான் கடுமையான மன உளைச்சலில் தற்கொலைக்கு முயன்றேன். மருத்துவமனையில் நான் சிகிச்சை பெற்று வந்த போது என்னை தொடர்பு கொண்ட முத்துக்குமரன், உன் தற்கொலை முயற்சிக்கும் எனக்கு எந்த தொடர்பும் இல்லை என்று சொல்ல வேண்டும், இந்த விவகாரம் வெளியில் தெரிந்தால் நான் தற்கொலை செய்து கொள்வேன் என்று என்னை மிரட்டினார்.
அந்த சமயத்தில் நான் வெளியிட்ட வீடியோவில் என்னுடைய தற்கொலை முயற்சிக்கு காரணம் நான் தான் என்று கூட ஒரு வீடியோவில் சொல்லி இருந்தேன். அதற்கு காரணம் அவர் என்னிடம் நடந்து கொண்ட விதம். நான் எடுத்த முடிவுகள் தான் தவறு என்று என்னையே நினைக்க வைத்து, நான் இறந்து போனால் கூட
எல்லோரும் என்னை தானே பேசுவார்கள் என்று தான் நினைத்து நான் என்னுடைய தற்கொலைக்கு காரணம் நான் தான் என்று அந்த வீடியோவில் பேசி இருந்தேன்.
புகார் கொடுக்க நினைக்கல
முதலில் நான் அவர் மீது புகார் கொடுக்க வேண்டும் என்று நினைக்கவே இல்லை. ஆனால் அவர் செய்த தப்புக்கு, எனக்கு நம்பிக்கை கொடுத்து ஏமாற்றியதற்கு ஒரு மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது என்னை சமாதானப்படுத்த வேண்டும் என்று நான் நினைத்த ஆனால் அவர் அதற்கு எந்த இடத்திலும் யோசிக்க கூட இல்லை. அதனால் தான் நான் அவர் மீது புகார் கொடுப்பதற்கு இவ்வளவு நாட்கள் ஆனது. சில நாட்களுக்கு முன்பு கல்லல் குடி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துவிட்டு முத்துக்குமாரனின் பெற்றோரை நேரில் சந்தித்து பேச போயிருந்தேன், ஆனால் அவருடைய பெற்றோரும் பேச தயாராக இல்லை அலட்சியப்படுத்தி இருந்தனர். அதனால்தான் பொறுமை இழந்து இப்போது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்திருக்கிறேன்.
முத்துக்குமரன் தவறை உணராமல் இருப்பது எனக்கு நீதி கிடைக்க போராட வேண்டும் என்று எண்ணத்தை தூண்டியது. என்னோடு சேர்ந்து வாழ வேண்டும் என்று முத்துக்குமரன் கூறினால் அதற்கு நான் சம்மதிப்பேன். ஆனால் எந்த வாக்குறுதி கொடுத்து என்னுடன் உடல் ரீதியாக பழகினாரோ அதன்படி தாலி கட்ட வேண்டும். அதை கொடுக்க மறுத்தால் 10 வருடம் சிறையில் கம்பி என்ன வேண்டும் என்று வாஹதா பேசி இருக்கிறார்.
வழக்கறிஞர் பேட்டி
அதைத்தொடர்ந்து அவருடைய வழக்கறிஞர் பிரியதர்ஷினி செய்தியாளர்களிடம் பேசும்போது, சட்டப்படி திருமண வாக்குறுதி அளித்து உடலுறவு கொண்டு ஏமாற்றியது, தற்கொலைக்கு தூண்டியது, மோசடி மற்றும் மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் முத்துக்குமரன் மீது புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஹாஸ்பிடலில் 2 நாட்கள் சிகிச்சை பெற்றது மற்றும் அவரது உறவினர்கள் சமாதானமாக பேசிய அழைப்பு, ஆதாரங்கள் அனைத்தும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த புகார் மேல்விசாரணைக்காக மதுரவாயல் அனைத்து மக்களே காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

இனி என்ன நடக்கும்
வாஹதா கடந்த செப்டம்பர் மாதத்தில் தற்கொலை முயற்சி செய்திருந்தார். ஆனால் இப்போது அவர் நவம்பர் 16ஆம் தேதி புகார் கொடுத்திருக்கிறார். தொடர்ந்து தனது சோசியல் மீடியா பக்கத்திலேயே முத்துக்குமரன் பற்றி வீடியோக்கள் வெளியிட்டுக் கொண்டு இருந்தார். நேற்று கூட முத்துக்குமரன் ஒரு ஷார்ட் பிலிமில் நடித்த வீடியோ காட்சி வைரல் ஆனது, அதில் முத்துக்குமார்களுக்கும் இன்னொரு பெண்ணுக்கும் திருமணம் நடப்பது போல காட்சி இருந்தது. அந்த வீடியோவுக்கு கீழ வாஹதா துடப்பத்தை எடுத்து அடிப்பதுபோல கமெண்ட் கொடுத்து இருந்தார். இது பேசப்பட்டு வரும் நிலையிலேயே இப்போ முத்துக்குமரன் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் இருக்கிறார். இதனால் காவல்துறை ஆக்ஷன் இனி என்ன மாதிரி இருக்கும் என்று எதிர்பார்ப்பு அனைவருக்கும் வருகிறது


Click it and Unblock the Notifications
