தள்ளுவண்டியில் 5 வயது சிறுவன் சடலத்தை கிடத்திவிட்டு கண்ணீருடன் செல்லும் இருவர்.. புதிய வீடியோ
விழுப்புரம்: விழுப்புரத்தில் தள்ளுவண்டியில் கிடத்தப்பட்ட 5 வயது குழந்தை இறந்து கிடந்த வழக்கில் குழந்தையை சலவை வண்டியில் போட்டுவிட்டு கண்ணீருடன் செல்லும் இருவரின் மற்றொரு சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
Recommended Video
விழுப்புரத்தில் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேல் தெரு என்ற இடத்தில் சிவக்குமார் (45) என்பவர் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சாலையோரமாக தள்ளுவண்டியில் சலவைத் தொழில் செய்து வருகிறார்.
விழுப்புரத்தில், கடந்த 15-ஆம் தேதி விழுப்புரம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த துணி சலவை செய்யும் வாகனத்தில், 5 வயது சிறுவன் தூங்கிக் கொண்டிருப்பதாக நினைத்து அங்கிருந்தவர்கள் எழுப்பினர்.

அசைவில்லாத சிறுவன்
ஆனால் சிறுவன் அசைவில்லாமல் இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து காவல்துறைக்கு தகவல் கொடுத்ததில் அவர்கள் வந்து பார்த்த போது சிறுவன் பலியாகி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அந்த சிறுவனின் உடலுக்கு உரிமை கோர யாரும் வரவில்லை.

யாருடைய குழந்தை
இதுதொடர்பாக இறந்தது யார், யாருடைய குழந்தை என்பது குறித்து 4 தனிப்படை அமைத்து விழுப்புரம் மேற்கு காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் குழந்தையை இருவர் தூக்கி செல்லும் காட்சிகள் இதுவரை 3 வீடியோ காட்சிகள் போலீசாரால் வெளியிடப்பட்டன.

4ஆவது வீடியோ
இந்நிலையில் தற்போது நான்காவது வீடியோ பதிவில் குழந்தையை தள்ளுவண்டியில் வைத்து விட்டு இருவரும் தனியாக நடந்து வரும் வீடியோ பதிவு போடப்பட்டுள்ளன. இவர்கள் யார் என்பது குறித்து விழுப்புரம் மாவட்டத்தில் விசாரணை மேற்கொண்ட நிலையில் இவர்கள் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் அங்கு தீவிரமாக தேடி வருகின்றனர்.

கண்ணீர் விட்ட காட்சிகள்
ஏற்கனவே இறந்த குழந்தையை தூக்கி செல்லும் காட்சிகள் வெளியாகி இருந்த நிலையில் தற்போது குழந்தையின் சடலத்தை போட்டுவிட்டு கண்ணீருடன் செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளன. எனவே விழுப்புரம் மாவட்டத்தை சுற்றியுள்ள அண்டை மாவட்டங்களில் அவர்களை போலீஸார் தேடி வருகிறார்கள்.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications