பாகப்பிரிவினையில் நிலம் கேட்ட முதல் மனைவியின் 2வது மகன்.. சித்தினு கூட நினைக்கல.. அரண்ட விழுப்புரம்
விழுப்புரம்: தந்தை வழிச் சொத்துக்கள், பூர்வீக சொத்துக்கள், தந்தையின் சுயமாக சம்பாதித்த சொத்துக்கள் போன்றவை அனைத்துமே பாகப்பிரிவினைக்கு உட்பட்டவையாக கருதப்படுகிறது. அதேபோல மகன்களுக்கு சமமாக மகள்களுக்கும் சொத்தில் பங்குண்டு. , ஒருவர் உயிருடன் இருக்கும்போதே உயில், பாகப்பிரிவினை வாரிசுகளுக்கு எழுதி வைப்பது, குடும்ப வன்முறைகள், உறவு சிக்கல்களை பிற்காலத்தில் தவிர்க்கும் என்பார்கள்.. ஆனால், பாகப்பிரிவினையால் ஏற்படும் குடும்ப வன்முறைகள் அதிகரித்தவாறே உள்ளது.. இப்போது விழுப்புரத்திலும் ஒரு சம்பவம் நடந்து அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே உள்ளது துறிஞ்சிப்பூண்டி என்ற கிராமம்.. இங்கு வசித்து வந்த 60 வயது விவசாயி பழனிவேலு.. இவருக்கு வெறுத்தாம்பாள் (55), ஜெயக்கொடி (45) என்ற 2 மனைவிகள் உள்ளனர்..

மூத்த மனைவி வெறுத்தாம்பாளுக்கு பாலகுரு (28), பிரகாஷ் ராஜ் (25) என்ற 2 மகன்களும், ஜெயக்கொடிக்கு பூபாலன்(19) என்ற மகனும், 17 வயதில் மகளும் உள்ளனர்.
திண்டிவனம் சிப்காட் சூப்பர்வைசர்
முதல் மனைவி வெறுத்தம்மாளுக்கும், பழனிவேலுவுக்கும் கருத்து வேறுபாடுகள் வெடித்தன.. இதனால், கணவரை பிரிந்த வெறுத்தம்மாள், தன்னுடைய மகன்களுடன் திண்டிவனம் தாலுகா நடுவாநந்தம் கிராமத்தில் வசித்து வருகிறார். இதில், முதல் மகன் பாலகுரு, சென்னையிலுள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.. பிரகாஷ்ராஜ் திண்டிவனம் சிப்காட்டில் உள்ள தனியார் கம்பெனியில் சூப்பர்வைசராக உள்ளார்..
முதல் மனைவி பிரிந்து சென்றுவிட்டதால், இரண்டாவது மனைவி ஜெயக்கொடியுடன் துறிஞ்சிப்பூண்டியில் பழனிவேல் வசித்து வருகிறார்.. இவர்களது மகன் பூபாலன் மேல்மலையனூர் பகுதியிலுள்ள தனியார் கல்லூரியில் BSc இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.. 17 வயது மகள், பிளஸ் டூ முடித்துவிட்டு, சென்னையிலுள்ள தனியார் கல்லூாியில் BSc முதல் வருடம் படித்து வருகிறார்.
கிணற்றில் கிடந்த சித்தி
இதனிடையே, உடல்நலம் பாதிக்கப்பட்ட பழனிவேலு, 2 மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். பிள்ளைகளும் வெளியூரில் கல்லூரியில் படித்து வருவதால், ஜெயக்கொடி மட்டும் வீட்டில் தனியாக இருந்து வந்துள்ளார்..
இந்நிலையில், நேற்று காலையில் ஜெயக்கொடி வீட்டின் எதிரிலுள்ள கிணற்றில் ரத்தக்கறை படிந்துள்ளதை பார்த்து அந்த ஊர் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.. உடனடியாக இதுகுறித்து வளத்தி போலீசாருக்கு தகவல் தந்தனர். தீயணைப்பு வீரர்களுடன் விரைந்து வந்த போலீசார், கிணற்றில் இறங்கி தேடியபோது, ஜெயக்கொடியின் சடலத்தை கண்டெடுத்தனர்..
உடம்பில் கட்டப்பட்ட கல்
ஜெயக்கொடியின் கை, கால்கள் கட்டப்பட்டிருந்தன.. அவரது தலை சிதைந்த நிலையில் கிடந்தது.. உடலில் கல் கட்டப்பட்டிருந்தது.. ஜெயக்கொடியை யாரோ அடித்துக்கொன்று கை, கால்களை கட்டி பிறகு உடலோடு கல்லையும் சேர்த்து கட்டி சடலத்தை கிணற்றில் வீசியிருப்பது தொியவந்தது. இதனால் கொலையாளி யார் என்ற விசாரணையை போலீசார் மேற்கொண்டனர்.
அப்போதுதான் ஜெயக்கொடிக்கும், முதல்மனைவியின் 2வது மகன் பிரகாஷ்ராஜூக்கும் இடையே குடும்ப தகராறு இருந்து வந்தது தெரியவந்தது. உடனே போலீசார் சந்தேகமடைந்து, வெறுத்தம்மாளின் திண்டிவனம் வீட்டிற்கு விரைந்து சென்று, அங்கிருந்த பிரகாஷ்ராஜை பிடித்து விசாரித்தனர்.. அப்போதுதான் தன்னுடைய சித்தி ஜெயக்கொடியை கொலை செய்ததை பிரகாஷ்ராஜ் ஒப்புக் கொண்டார்.
சித்தியிடம் நிலத்தில் பங்கு கேட்ட மகன்
அதாவது அப்பா பழனிவேல் பெயரிலிருந்த நிலத்தை பிரகாஷ்ராஜ் பங்கு பிரித்து கேட்டாராம்.. இதற்கு ஜெயக்கொடி மறுத்துள்ளதால்.. இந்த ஆத்திரத்தில்தான், சம்பவத்தன்று ஜெயக்கொடியின் தலையில் கல்லை தூக்கிப்போட்டு அவரை பிரகாஷ்ராஜ் கொன்றதும், ஜெயக்கொடியின் கை, கால்களை கட்டி பெரிய கல்லுடன் உடலையும் சேர்த்துக்கட்டி எதிரே உள்ள கிணற்றில் வீசி சென்றதும் உறுதியானது..
இதையடுத்து பிரகாஷ்ராஜை போலீசார் கைது செய்து, இதில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்றும் விசாரித்து வருகிறார்கள். சித்தியை மகனே கொன்று கிணற்றில் வீசிய சம்பவம் விழுப்புரத்தில் அதிர்வலையை உண்டுபண்ணி வருகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications