விழுப்புரத்தில் பரபரப்பு! பெரியார் சிலையைச் சேதப்படுத்திய மர்ம நபர்கள்! கொந்தளித்த பொதுமக்கள்
விழுப்புரம்: விழுப்புரத்தில் பெரியார் படிப்பகம் அருகே அமைந்திருந்த பெரியார் சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் பகுதியில் அமைந்துள்ளது பெரியார் படிப்பகம்.இதன் அருகில் மார்பளவு பெரியார் சிலை ஒன்று நிறுவப்பட்டு உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் இந்தப் பகுதியில் தான் பொங்கல் விழா கொண்டாடப்படும். இந்த நிலையில் நேற்று இரவு மர்ம நபர்கள் யாரோ சிலர் பெரியார் சிலையை சேதப்படுத்தியுள்ளனர்.
பெரியார் சிலையில் இருந்த கண்ணாடி உடைக்கப்பட்ட நிலையிலும் மற்றும் முகம் மூக்கு அமைக்கப்பட்ட பகுதியில் உடைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இன்று அதை அறிந்த அந்த பகுதி மக்கள் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.
இது தொடர்பாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீதார், இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். சிலையைச் சுற்றி கம்பிவேலி அமைக்கப்பட்டு இருந்த நிலையில், கம்பி வேலியை உடைத்து அதற்குள் இருந்த சிலையைச் சேதப்படுத்தியுள்ளனர்.
பெரியார் சிலையைச் சேதப்படுத்திய மர்ம நபர்களைக் கைது செய்ய வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து விசாரணையைத் தொடங்கி உள்ள போலீசார், பெரியார் சிலையைச் சேதப்படுத்திய மர்ம நபர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
நள்ளிரவு நேரத்தில் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications