கொட்டோ கொட்டுனு கொட்டுது துட்டு..! தேர்தலில் பண மழை.. ’இது’ தான் காரணம்! அன்புமணி சொன்ன புகார்!
விழுப்புரம்: வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதாக புகார்கள் வருகிறது.. ஆனால் இதுவரைக்கும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்ததாக தெரிவிக்கவில்லை என்றும் நியாயமான முறையில் தமிழகத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்பில்லை என பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் புகார் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் பொதுமக்கள் ஆர்வத்துடன் தங்கள் வாக்கினை பதிவு செய்து வருகின்றனர்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பிரபல தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் நடிகர்கள் நடிகைகள் உள்ளிட்ட பலரும் காலையிலிருந்து வாக்குச்சாவடியில் காத்திருந்து தங்கள் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.
அன்புமணி ராமதாஸ்: அந்த வகையில் திண்டிவனம் மரகதாம்பிகை அரசு பள்ளி வாக்கு சாவடி மையத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தனது மகள்கள் சம்யுக்தா, சஞ்சித்ரா, சங்கமித்ரா ஆகியோருடன் இணைந்து வாக்கினை செலுத்தி ஜனநாயக கடமை ஆற்றினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்," தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பாமக கூட்டணிக்கு சாதகமான அமைதி புரட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது. தமிழகம் புதுச்சேரியில் 40 தொகுதிகளில் பாமக கூட்டணி வெற்றி பெறும்.
அமைதி புரட்சி: மக்கள் மனதில் மாற்றம் வரவேண்டுமென ஏக்கம் இருப்பதால் நிச்சயமாக தங்கள் கூட்டணி வெற்றி பெற்று மூன்றாவது முறையாக மிகப்பெரிய வெற்றி பெற்று பிரதமராக மோடி தொடர்வார். சித்திரை மாதம் மாம்பழ சீசன். தேர்தல் நியாயமாகவும் அமைதியாகவும் நடைபெறுகிறது. வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா கொடுப்பதாக புகார்கள் வருகிறது. ஆனால் இதுவரைக்கும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை. அரக்கோணம் பகுதியில் பணம் பிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் நடவடிக்கை இல்லை.
பண பட்டுவாடா: ஆளும் கட்சியினர் அதிகாரிகளை வைத்து கொண்டு பண பட்டுவாடா செய்துள்ளதாகவும், 99 சதவிகித அதிகாரிகள் தமிழ்நாட்டினை சார்ந்தவர்களாக இருப்பதால் அரசு மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் தயங்குவதாகவும், இதற்கு தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறோம். தேர்தல் சட்டங்களில் மாற்றம் கொண்டு வர வேண்டும். வேட்பாளர் பணம் கொடுத்து வாக்கு பெற்றால் தகுதி நீக்கம் செய்ய வேண்டுமென்ற சட்டம் கொண்டு வர வேண்டுமென தேர்தல் விதிகளை தீவிரமாக்க வேண்டும்
பணம் கொடுக்கும் கலாச்சாரம்: தமிழகத்தில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் உள்ளது. உத்திரபிரதேசம், மஹாராஷ்டிரா போன்ற இடங்களில் இது போன்ற கலாச்சாரம் இல்லை. நியாயமான முறையில் தமிழகத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்பில்லை. பணம் வைத்துள்ளவர்களுக்கு சாதகமாக கடந்த தேர்தலில் வாக்களித்துள்ளார்கள். ஆனால் இந்த தேர்தலில் பாமகவிற்கு மக்கள் வாக்களிக்க அமைதி புரட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது. 57 ஆண்டுகள் மக்கள் இரு கட்சிகளுக்கு வாக்களித்தது போதுமென முடிவு செய்துவிட்டதால் இந்த தேர்தலில் பிரதிபலிக்கும்" என பேசினார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications