திண்டிவனத்தில் திகுதிகு.. வன்னியர் சங்க அலுவலகத்திற்கு பூட்டு! ராமதாஸ்-அன்புமணி ஆதரவாளர்கள் மோதல்
விழுப்புரம்: அன்புமணியை பாட்டாளி மக்கள் கட்சியிலிருந்து, கட்சியின் நிறுவனர் ராமதாஸ் நீக்கியிருந்தது சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் இன்று திண்டிவனத்தில் அன்புமணி மற்றும் ராமதாஸ் ஆதரவாளர்கள் மோதலில் ஈடுபட்டிருக்கின்றனர்.
விழுப்புரம்-திண்டிவனம் சாலையில் உள்ள மேம்பாலம் அருகே வன்னியர் சங்க அலுவலகம் ஒன்று அமைந்திருக்கிறது. வருகிற 17-ஆம் தேதி வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்த 21 பேருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. இதில் அன்புமணி பங்கேற்பார் என்றும் சொல்லப்பட்டிருந்தது.

ஆனால் இதை ஏற்காத ராமதாஸ் ஆதரவாளர்கள், உடனடியாக அந்த அலுவலகத்துக்கு பூட்டு போட்டனர். இந்த விஷயத்தை கேள்விப்பட்டு அலுவலகம் முன்பு குவிந்த அன்புமணி ஆதரவாளர்கள், ராமதாஸ் ஆதரவாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் இந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறியது. இதையடுத்து அருகில் இருந்தவர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்த நிலையில், இரு தரப்பினரையும் போலீசார் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் திண்டிவனத்தில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
சமீப காலமாகவே பாட்டாளி மக்கள் கட்சியில் அன்புமணிக்கும், கட்சியின் நிறுவனமான ராமதாசுக்கும் இடையே அடிக்கடி மோதல் போக்குகள் வெடித்து வந்தன. இதற்கு தொடக்கப்புள்ளியாக அமைந்நத சம்பவம், கடந்த ஆண்டு நடைபெற்ற புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம்தான்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற புத்தாண்டு சிறப்பு பொதுக் குழுவில், தனது பேரன் முகுந்தனை பாமக இளைஞர் சங்க தலைவராக ராமதாஸ் நியமித்திருந்தார். இந்த நியமனம் தொடர்பாக ஏற்கனவே அன்புமணிக்கு விஷயம் தெரிந்திருந்தது. மறைமுகமாக பல்வேறு விதங்களில் நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ராமதாஸ் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்து, அதை புத்தாண்டு பொதுக்குழுவிலும் அறிவித்துவிட்டார். எனவே அன்புமணி மேடையில் அறிவிப்பு வெளியான உடனேயே கடும் எதிர்ப்பு தெரிவித்து மைக்கை தூக்கி வீசினார். இந்த சம்பவத்துக்கு பிறகு தந்தை மகன் இடையே மோதல்கள் தீவிரம் அடைந்தன.
மோதலி உச்சமாக, பாமக தலைவர் பொறுப்பிலிருந்து அன்புமணி நீக்கப்பட்டார். கடந்த ஏப்ரல் 10ம் தேதி கட்சி தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்குவதாக அறிவித்த ராமதாஸ், தலைமை பொறுப்பை கூடுதலாக தானே ஏற்றுக் கொள்வதாகவும் அன்புமணியை செயல் தலைவராக நியமிப்பதாகவும் அறிவித்தார். தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்குவதற்கு காரணம், அன்புமணியின் மூன்று ஆண்டுகால தலைவர் பதவி மே 28ஆம் தேதியோடு நிறைவடைந்துவிட்டது என்பதால்தான் என்று ராமதாஸ் விளக்கம் அளித்து இருந்தார்.
மட்டுமல்லாது அன்புமணியை இளம் வயதில் மத்திய அமைச்சராக்கியது தவறு என்றும், பாஜகவுடன் கூட்டணி அமைக்க மனைவியுடன் சேர்ந்து என் கால்களை பிடித்துக் கொண்டு அழுதார் எனவும், தாய் மீது பாட்டிலை வீசினார் எனவும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை அன்புமணி மீது ராமதாஸ் அடுக்கியிருந்தார். இப்படி இருக்கையில், புதுச்சேரி அடுத்த பட்டாணூரில் கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதி சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகளை முன்வைத்து ஒழுங்கு நடவடிக்கை குழுவுக்கு பரிந்துரைக்கப்பட்டது.
குற்றச்சாட்டு குறித்து பதிலளிக்க கோரி இரண்டு முறை அன்புமணிக்கு நோட்டீஸ் அனுப்பியும் அவரிடமிருந்து பதில் வரவில்லை. இதனை அடுத்து கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டதாகவும், 16 குற்றச்சாட்டுகள் மீது போதுமான அவகாசம் அளித்தும் விளக்கம் அளிக்கவில்லை என்று சொல்லியும் அன்புமணியை கட்சியிலிருந்து ராமதாஸ் நீக்கியுள்ளார். இந்தப் பின்னணியில் தான் அன்புமணி ஆதரவாளர்கள் மற்றும் ராமதாஸ் ஆதரவாளர்களுக்கு இடையே மோதல் வெடித்திருக்கிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications