பொன்முடிக்கு வந்த நிலைமைய பாருங்க! விழுப்புரத்திலேயே ‘மவுசு’ காலி.. திமுகவினரே புறக்கணித்த சோகம்!
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் தவிர்க்க முடியாத அரசியல் புள்ளியாக இருந்த முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு தற்போது மவுசு குறைந்துள்ளது. திமுக தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலினின் கோபத்துக்கு உள்ளானதால் பதவி பறிக்கப்பட்ட நிலையில், பொன்முடியின் பெயர் கட்சி பேனர்களில் இடம்பெறாதது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் நேற்றும் இன்றும் விழுப்புரத்தில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்காக வைக்கப்பட்ட பேனர்களில் முன்னாள் அமைச்சரும், திமுகவின் முன்னாள் துணை பொதுச் செயலாளரும், திருக்கோவிலூர் தொகுதி எம்எல்ஏவுமான பொன்முடியின் பெயரும் புகைப்படமும் இடம்பெறாதது திமுகவிற்குள் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

விழுப்புரம் திமுக
விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக செயலாளர் டாக்டர் லட்சுமணன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அமைச்சர் எம். ஆர்.கே.பன்னீர்செல்வம் பங்கேற்று உரையாற்றினார். அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், விழுப்புரம் மாவட்டத்திற்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அவரை வரவேற்று பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.
ஆனால், விழுப்புரம் மாவட்டத்தில் முக்கிய அரசியல் தலைவராகத் திகழும் முன்னாள் அமைச்சர் பொன்முடியின் பெயர், புகைப்படம் கட்சி பேனர்களில் இடம்பெறாதது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரம் திமுகவின் தவிர்க்க முடியாத முகமாகத் திகழ்ந்த பொன்முடி உள்ளூர் கட்சியினராலேயே புறக்கணிப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பொன்முடி பதவி பறிப்பு
அமைச்சர் பொன்முடி தொடர்ந்து சில சர்ச்சைகளில் சிக்கி வந்தார். அண்மையில், சைவம், வைணவம் சமயங்கள் குறித்தும் பெண்கள் பற்றியும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதன் காரணமாக பொன்முடி, திமுக துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர் அமைச்சர் பதவியும் பறிக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, விழுப்புரத்திலும் அவருக்கு செல்வாக்கு குறைந்துள்ளது. சமீபத்தில் 8 மண்டலங்களுக்கு திமுகவில் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். அதிலும் பொன்முடியின் பெயர் இடம்பெறவில்லை. பொன்முடியின் சொந்த மாவட்டமான விழுப்புரம் மாவட்ட பொறுப்பாளராக கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் நியமிக்கப்பட்டார்.
கட்சியினரால் புறக்கணிக்கப்படும் பொன்முடி
இந்நிலையில் தான் விழுப்புரத்தில் நடைபெறும் கட்சி நிகழ்வுகளிலும் அவரது பெயர் மற்றும் புகைப்படம் தவிர்க்கப்பட்டு வருகிறது. விழுப்புரத்தில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் செயற்குழு கூட்டம் நடைபெற்ற நிலையில், அவரை வரவேற்கும் விதமாக கலைஞர் அறிவாலயம் முன்பாக பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இதில் பொன்முடியின் புகைப்படம் தவிர்க்கப்பட்டுள்ளது.
இது, முன்னாள் அமைச்சர் பொன்முடியை முற்றிலும் புறக்கணிக்கும் முயற்சியாக பார்க்கப்படுகிறது. பொன்முடியின் பெயர் பேனர்களில் இடம்பெறாதது, அவரது ஆதரவாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின் பொன்முடி மீது கொண்ட கோபம் உள்ளூர் அரசியலிலும் பொன்முடிக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது.
பொன்முடி மகன்
முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகன் கெளதம சிகாமணி மாவட்ட செயலாளராக பொறுப்பு வகிக்கும் விழுப்புரம் தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் நேற்று, அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் வைக்கப்பட்டிருந்த பேனரில் பொன்முடியின் படங்கள் இடம்பெற்றன. இந்த செயற்குழு கூட்டத்தில் பொன்முடியும் பங்கேற்றிருந்தார்.
முனைவர் பட்டம் பெற்றவரான பொன்முடி, மாணவப் பருவத்திலேயே அரசியலுக்கு வந்தவர். 1989ல் முதல் முறையாக எம்.எல்.ஏவாக வெற்றி பெற்ற பொன்முடி, தற்போது 6வது முறையாக எம்.எல்.ஏவாக இருந்து வருகிறார். 1989 முதல் திமுக ஆட்சிக்கு வந்த போதெல்லாம் அமைச்சர் பதவியில் இருந்தவர். இன்றைக்கு சர்ச்சை பேச்சுகளால் அவரது பதவிகள் பறிபோன நிலையில், கட்சியினராலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது திமுகவில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
திமுக போட்டியிடும் தொகுதிகள் எவ்வளவு.. கூட்டணி கட்சிகளுக்காக ஸ்டாலின் எடுக்கும் ரிஸ்க் -
வேல்முருகன் வெளியேற்றம்.. கடலூரில் திமுகவுக்கு இழப்புதான்.. சொல்கிறார் பத்திரிகையாளர் தராசு ஷ்யாம்! -
எடப்பாடியின் அரசியல் "மெச்சூரிட்டி".. பாஜக, அமமுகவை அடக்கி.. சத்தமே இன்றி சம்பவம் பண்ணிட்டாரே! -
“தேமுதிக கண்டிப்பாக விட்டுக்கொடுக்கும்” பிரேமலதா சொன்ன வார்த்தையால் திமுக தலைமை குஷி! -
துண்டு துண்டாக உடைகிறதா திமுக ஓட்டு? சென்னை வேளச்சேரி தவெக விஜய் 18% வாக்குகளா? ஷாக் பாயிண்ட் -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
கோவை மாவட்டத்தில் 6 தொகுதிகளை கேட்கும் கூட்டணி! திமுகவுக்கு நிம்மதி கொடுத்த அந்த ரிப்போர்ட்! -
Duraimurugan: தவாக வேல்முருகன் விலகியது குறித்த கேள்விக்கு! துரைமுருகனின் face expression-ஐ பாருங்க -
என்னை முதல்வராக்கினால்! பெண்களுக்கு ரூ 1 லட்சம்! ஆண்டிப்பட்டி திமுக எம்எல்ஏ பேச்சால் கோபத்தில் தலைமை -
சிபிஎம் கட்சிக்கு 5 தொகுதிகள்தான்! கட் அன்ட் ரைட்டாக சொன்ன ஸ்டாலின்! பெ.சண்முகம் வைத்த டிமாண்ட் -
திருவாடானை தொகுதியில் களமிறங்கும் திமுக? MLA சீட் ரேஸில் யார்? -
உடையும் திமுக காங்கிரஸ் கூட்டணி? தொகுதிகளை முடிவு செய்வதில் நீடிக்கும் குழப்பம்! புதுச்சேரியில் பரபர












Click it and Unblock the Notifications