என்டிஏ கூட்டணியில் ராமதாஸ்? பிரதமர் மோடியை சந்தித்தால் என்ன தவறு.. கேள்வி கேட்ட பாமக எம்எல்ஏ அருள்!
விழுப்புரம்: பிரதமர் மோடியுடன் பாமக நிறுவனர் ராமதாஸ் சந்திப்பு நடத்துகிறாரா என்ற கேள்விக்கு அக்கட்சியின் எம்எல்ஏ அருள் பதில் அளித்துள்ளார். ராமதாஸ் மீது பிரதமர் மோடி மிகப்பெரிய மரியாதை வைத்திருப்பதாக கூறிய அருள், அவர்கள் இருவரும் சந்திப்பு நடத்தினால் என்ன தவறும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
சட்டசபைத் தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில், அதிமுக கூட்டணியில் அன்புமணி தரப்பு பாமக இணைந்திருக்கிறது. இதனால் ராமதாஸ் தரப்பு பாமக யாருடன் கூட்டணி அமைக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. முதலில் திமுகவுடன் ராமதாஸ் தரப்பு கைகோர்க்கும் என்று சொல்லப்பட்ட நிலையில், திமுக தலைமை எந்தவித சிக்னலும் காட்டவில்லை. ஏனென்றால் விசிக தலைவர் திருமாவளவனுக்கு திமுக தலைமை முக்கியத்துவம் அளித்தது.

அதுமட்டுமல்லாமல் பாமக ஆதரவு வன்னியர் வாக்குகள் அதிமுக பக்கம் செல்லவே வாய்ப்பு அதிகம் என்று கணக்கிடப்படுகிறது. இதனால் தலித் சமூக வாக்குகளை இழக்க திமுக தயாரில்லை. இதனால் ராமதாஸ் தரப்பை கூட்டணியில் சேர்க்க திமுக முன்வரவில்லை. இதனால் ராமதாஸ் தரப்பு பாமக யாருடன் கூட்டணி அமைப்பது என்று தெரியாமல் தடுமாறி வருகின்றனர்.
இந்த நிலையில் ராமதாஸ் தரப்பு பாமக எம்எல்ஏ அருள் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், ராமதாஸ் தரப்பு பாமகவை கூட்டணியில் சேர்க்க வேண்டும் என்று பல கட்சிகளும் ஆர்வம் காட்டுகின்றனர். எங்களுக்கு வரும் அழைப்புகளை எடுத்து பதில் சொல்ல முடியாத அளவிற்கு அழுத்தம் உள்ளது. பாஜக கூட்டணியில் இணைய நெருக்கடி கொடுக்கிறார்கள்.
ராமதாஸ் தரப்பை இணைத்தால் மட்டுமே வெற்றி என்பதை அனைவரும் புரிந்து கொண்டுள்ளனர். எங்களுடன் வாங்க என்று அனைவரும் வேண்டுகோள் வைத்திருக்கிறார்கள். பாமகவை தொடங்கியது ராமதாஸ் தான். அவர்தான் மக்களை சந்தித்துள்ளார். அதனால் மாம்பழ சின்னம் எங்களுக்கு தான் கிடைக்கும். அப்படி கிடைக்கவில்லை என்றால், நீதி தர்மம் விலைக்கு வாங்கப்பட்டதாக அர்த்தம்.
கூட்டணிக்கான இறுதி முடிவை எடுக்கும் அதிகாரம் ராமதாஸ் வசம் உள்ளது. பிரதமர் மோடிக்கு ராமதாஸ் மீது மிகப்பெரிய மரியாதை உள்ளது. அதனால் பிரதமரை சந்தித்தால் என்ன தவறு? இவர்கள் இருவரும் சந்திப்பார்களா என்று தெரியாது என்று கூறியுள்ளார். இதனால் என்டிஏ கூட்டணியில் ராமதாஸ் இணைகிறாரோ என்ற குழப்பம் எழுந்துள்ளது.
மார்ச் 1 மதுரை வரும் பிரதமர் மோடி, அடுத்ததாக மார்ச் 6 மற்றும் 13 ஆகிய தேதிகளில் வேலூர் மற்றும் திருச்சி மாவட்டங்களுக்கு வருகிறார். மார்ச் மாதத்தின் முதல் 2 வாரத்தில் பிரதமர் மோடி 3 முறை தமிழ்நாடு வரும் சூழலில், என்டிஏ கூட்டணி இறுதி வடிவம் பெறும் என்று கருதப்படுகிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications