கள்ளக்குறிச்சியில் தாய், தந்தை இருவரையும் இழந்த மாணவன்.. முதல்வர் விஜய்க்கு வைத்த கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே தந்தையின் இறுதிச்சடங்கிற்கு பணமின்றி தவித்த பிளஸ்-1 மாணவனுக்கு கிராம மக்கள் உதவிக்கரம் நீட்டி அடக்கம் செய்தனர். தாய், தந்தை இருவரையும் இழந்த மாணவர் மோகன்ராஜ், முதல்வர் விஜய்க்கு வைத்த கோரிக்கையில், என் தந்தை தான் என்னை படிக்க வைத்தார். அவர் தற்போது உயிருடன் இல்லை. இப்போது எனக்கு யாரும் இல்லை.. என்னால் படிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனக்கு அரசு உதவி செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே எஸ்.குளத்தூர் கிராமத்தை சேர்ந்த 48 வயதாகும் நடராஜன் என்பவர் வசித்து வந்தார். இவர் அங்கு கூலி வேலை செய்து வந்தார். இவரது மனைவி கற்பனா. இவர்களின் மகன் மோகன்ராஜ் (16). இவர்களுக்கு ஷர்வாணி என்ற மகள் 2 வயதிலேயே இறந்துவிட்டாள். கற்பனா 12 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் மோகன்ராஜை, அவரது தந்தை நடராஜன் கவனித்து வந்தார். அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மோகன்ராஜ் பிளஸ்-1 படித்து வருகிறார்.

Request made to Chief Minister Vijay by a student in Kallakurichi who lost both his parents

கடந்த 2-ந்தேதி இரவு நடராஜன் உடல் நலக்குறைவால் காலமானார். ஏற்கனவே தாய், தங்கையை இழந்து பரிதவித்து வந்த நிலையில் தற்போது தந்தையும் இறந்ததால் மோகன்ராஜ் மிகுந்த மனவேதனையிருந்தார். உறவினர்கள் இல்லாத நிலையில் பணமும் இல்லாததால் தந்தையின் இறுதிச்சடங்கை நடத்த முடியாமல் மோகன்ராஜ் பரிதவித்து நின்றார்.

இதனை அறிந்த கிராம மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து பணம் திரட்டி நடராஜனுக்கு கடந்த அக்டோபர் 3ம் தேதி இறுதிச்சடங்கு செய்தார்கள். பின்னர் அவரது உடலை வாகனத்தில் ஊர்வலமாக எடுத்துச்சென்று அதே பகுதியில் உள்ள சுடுகாட்டில் அடக்கம் செய்தனர்.

இதுகுறித்து பெற்றோரை இழந்த மாணவர் மோகன்ராஜ் கூறும் போது, "நான் மிகவும் ஏழ்மை குடும்பத்தைச் சேர்ந்தவன். ஏற்கனவே தாய், தங்கை இறந்துவிட்ட நிலையில் எனது தந்தை கூலி வேலை செய்து என்னை படிக்க வைத்தார். இப்போது அவரும் இல்லை. இதனால் என்னால் மேற்கொண்டு படிக்க முடியாத சூழல் உள்ளது. எனவே நான் மேற்கொண்டு கல்வி பயிலவும், எனது வாழ்வாதாரத்திற்கும் தமிழக அரசு உதவ வேண்டும் என்று கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தார்.

பொதுவாக இதுபோன்ற சூழலில் பொதுமக்கள் பலர் உதவி செய்ய முன்வாருவார்கள். அதேநேரம் அரசும் நேரடியாக உதவி செய்யும். தாய் மற்றும் தந்தை இருவரையும் இழந்த பிளஸ் 1 மாணவருக்குப் படிப்பைத் தொடர அரசு பல திட்டங்களில் உதவி செய்யும். பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு அவர்கள் 18 வயது நிறைவடையும் வரை மாதம் ₹4,000 வரை பராமரிப்பு உதவித்தொகை வழங்கப்படும். அவருக்கு கல்லூரி படிப்பு வரை அனைத்து படிப்பு மற்றும் விடுதி வசதிகளையும் அரசே வழங்கும். மாவட்ட குழந்தைகள் நல அதிகாரிகளை அணுகினால் உடனே அதிகாரிகள் உதவி செய்வார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+