பகையை மறந்து இறங்கி வந்த சி.வி சண்முகம்.. வரவேற்ற ராமதாஸ்.. விருந்தால் நடந்த திருப்பம்!

பாமக நிறுவனர் ராமதாஸ் கொடுக்கும் விருந்தில் அதிமுக அமைச்சர் சி வி சண்முகம் கலந்து கொண்டு இருக்கிறார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    ராமதாஸ் வைத்த விருந்தால் நடந்த திருப்பம்!- வீடியோ

    விழுப்புரம்: பாமக நிறுவனர் ராமதாஸ் கொடுக்கும் விருந்தில் அதிமுக அமைச்சர் சி வி சண்முகம் கலந்து கொண்டு இருக்கிறார். பாமாவிற்கு எதிராக இருந்த பல நாள் பகையை மறந்து அவர் இந்த விருந்தில் கலந்து கொண்டுள்ளார்.

    லோக்சபா தேர்தலுக்கான அதிமுக - பாமக கூட்டணி உறுதியாகி உள்ளது.இந்த கூட்டணியில் பாமக மொத்தம் 7 இடங்களில் போட்டியிட முடிவெடுத்து இருக்கிறது.

    இந்த நிலையில் கூட்டணி உறுதியானதை அடுத்து பாமக நிறுவனர் ராமதாஸ் அதிமுக, பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சியை சேர்ந்தவர்களுக்கு விருந்து வைக்கிறார். விழுப்புரத்தில் உள்ள பாமக நிறுவனர் ராமதாஸுக்கு சொந்தமான தைலாபுரம் வீட்டில் விருந்து வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறது. அதிமுகக ட்சியை சேர்ந்தவர்கள் இந்த விருந்தில் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

    சி வி சண்முகம்

    சி வி சண்முகம்

    ஆனால் ராமதாஸ் கொடுக்கும் விருந்தை அதிமுக விழுப்புரம் எம்எல்ஏ சி வி சண்முகம் புறக்கணிக்க முடிவு எடுத்து இருப்பதாக செய்திகள் வந்தது. அதிமுக பாமக கூட்டணி உருவாவதை தொடக்கத்தில் இருந்தே எதிர்த்து வந்தவர் சிவி சண்முகம். ஆனாலும் அவரின் எதிர்ப்பை மீறி கூட்டணி உருவானது.

    முடியாது

    முடியாது

    இந்த நிலையில் கூட்டணியில் பாமகவுக்கு விழுப்புரம், திண்டிவனம் தொகுதிகளை கொடுக்கவும் சி வி சண்முகம் எதிர்ப்பு தெரிவித்தார். வட மாவட்டங்களில் வேறு இடங்களை கொடுக்கலாம். ஆனால் விழுப்புரம், திண்டிவனத்தில் எந்த இடமும் கொடுக்க கூடாது என்று சி வி சண்முகம் குறிப்பிட்டு இருந்தார்.

    நீண்ட நாள்

    நீண்ட நாள்

    ஏற்கனவே விழுப்புரத்தில் சி வி சண்முகம் மற்றும் பாமக இடையே பிரச்சனை இருந்தது. இந்த கூட்டணிக்கு முன்பே பாமக, சி வி சண்முகம் இடையே வடமாவட்டங்களில் பெரிய அளவில் மோதல் இருந்தது. அது இன்னும் முடியாமல் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. இதனால்தான் அவர் விருந்தில் கலந்து கொள்வதில் சந்தேகம் இருந்தது.

    அழைப்பு வரவில்லை

    அழைப்பு வரவில்லை

    இந்த நிலையில்தான் திடீர் திருப்பாமாக பாமக நிறுவனர் ராமதாஸ் கொடுக்கும் விருந்தில் சி வி சண்முகம் கலந்து கொண்டு இருக்கிறார். பாமாவிற்கு எதிராக இருந்த பல நாள் பகையை மறந்து, அதிமுக எம்எல்ஏக்களுடன் சேர்ந்து அவர் இந்த விருந்தில் கலந்து கொண்டுள்ளார். அவரை ராமதாஸ் வாசல் வரை சென்று வரவேற்றார். இதன் மூலம் இவர்கள் இடையே நீடித்து வரும் பிரச்சனை தீர வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+