பட்டா மாறுதல், நிலஅளவை.. 'தமிழ்நிலம் ஆப்பில்' இவ்வளவு விஷயம் இருக்கா? கலெக்டர் சொன்ன சூப்பர் தகவல்
விழுப்புரம்: நில அளவைத் தொடா்பான விவரங்களுக்கு தமிழ்நிலம் செயலியை பயன்படுத்தலாம் என்று விழுப்புரம் மாவட்ட கலெக்டர் சி.பழனி தெரிவித்துள்ளார்.
கடந்த 1991 முதல் 2002 வரை கிராமங்களில் உள்ள நிலம் தொடர்பான 'அ பதிவேடு', சிட்டா ஆகியவை கணினிமயமாக்கப்பட்டு, கணினிவழி பட்டா 'தமிழ்நிலம்' மென்பொருள் வாயிலாக வழங்கப்பட்டு வருகிறது. இதனிடையே எங்கிருந்தும் எந்நேரத்திலும் என்ற இணையவழி சேவை மூலம் பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்கும் வசதியை அண்மையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாட்டில் நகர்ப்புர நில ஆவணங்கள் 2014 முதல் 2017 ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் கணினிப்படுத்தப்பட்டு தமிழ்நிலம் (நகர்ப்புரம்) என்னும் மென்பொருள் மூலம் படிப்படியாக இணையவழி பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. கணினிப்படுத்தப்பட்ட பிளாக் வரைபடங்களை, தனித்தனி நகரப் புலங்களுக்கான வரைபடங்களாக என்ற இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ளும் இப்புதிய வசதி மூலமாக, பொதுமக்கள் நகர்ப்புர நிலவரைபடங்களை இணையவழியில் கட்டணமின்றி பெறலாம்.
மேலும் இந்த திட்டத்தின் காரணமாக பத்திரப்பதிவு செய்யும்போது தானாக பட்டா மாறுதல் செய்யும் வசதி அறிமுகமாகி உள்ளது. இந்த முறைப்படி, முந்தைய பட்டாவில் சொத்தை விற்பவரின் பெயர் சரியாக உள்ளதா? கிரைய பத்திரத்தில் குறிப்பிட்டுள்ள இடத்தின் சர்வே எண் மற்றும் உட்பிரிவு எண் ஆகியவை சரியாக உள்ளனவா? என்பதை சரிபார்த்து பதிவேற்றம் செய்ய முடியும். குறிப்பிட்ட பட்டாவை புதிதாக கிரையம் முடிப்பவரின் பெயருக்கு சரியாக மாற்றம் செய்ய முடியும்.
பட்டா மாறுதல் செய்யப்பட்டதும், சொத்தை வாங்கியவர் மற்றும் விற்றவரின் செல்போன் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பப்படுகிறது. கிரையம் முடித்தவர்கள் http://eservices.tn.gov.in என்கிற இணையதள முகவரியில் பட்டாவை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் தற்போது பட்டா மாறுதல் செய்யப்படும் வசதி மேலும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது என்றும் தமிழக அரசு சார்பில் அப்போது அறிவிக்கப்பட்டது.
இதனிடையே தமிழ் நிலம் குறித்து விழுப்புரம் மாவட்ட கலெக்டர் சி.பழனி வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தமிழ்நாடு நிலஅளவை, நிலவரித்திட்டத் துறை இணையதளத்தை தேசிய தகவல் மையம் மூலம் உருவாக்கியுள்ளது. இதில், பட்டா மாறுதல்- தமிழ்நிலம் கைப்பேசி செயலி இந்த இணையதளத்துடன் இணைக்கப்பட்டிருக்கிறது. மேலும், பட்டா மாறுதல் கோரி விண்ணப்பிக்கும் இணையவழி சேவை இவ்விணையத்துடன் இணைக்கப்பட்டிருக்கிறது.
உள்பிரிவு, உள்பிரிவில்லாத பட்டா மாறுதல் கோரி வரும் விண்ணப்பங்களை உடனுக்குடன் செயல்படுத்த தமிழ்நிலம் (ஊரகம்) மற்றும் தமிழ்நிலம் (நகரம்) மென்பொருள்கள் உருவாக்கப்பட்டன. இதைத் தொடா்ந்து, புலப்படங்களிலும் அனைத்து உள்பிரிவு மாற்றங்கள் கொண்டுவர ஏதுவாக, கொலாப்லேண்ட் மென்பொருள் உருவாக்கப்பட்டு, அவையும் இந்த இணையதளத்துடன் இணைக்கப்பட்டிருக்கிறது.
பட்டா, சிட்டா பாா்வையிட மற்றும் சரிபாா்க்க, அ-பதிவேடு, அரசு புறம்போக்கு நிலவிவரம், புலப்படம், நகர நிலஅளவை வரைபடங்கள் ஆகியவற்றை இலவசமாக பாா்வையிடவும், பதிவிறக்கம், பட்டா மாறுதல் விண்ணப்ப நிலை விவரங்களை அறியவும், எங்கிருந்தும், எந்நேரத்திலும் இணையவழி சேவை இணையதளத்துடன் இணைக்கப்பட்டிருக்கிறது.
மாவட்டங்கள், வட்டங்கள், கிராமங்கள், மாநகராட்சிகள், நகராட்சிகளின் விவரங்கள், துறையின் முக்கிய அரசாணைகள், சுற்றறிக்கைகள் உள்ளிட்டவற்றை பொதுமக்கள் இணையதளம், தமிழ்நிலம் செயலி மூலம் மூலம் பாா்வையிட்டு பயனடையலாம்" இவ்வாறு விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி கூறியுள்ளார்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications