விழுப்புரம்- விக்கிரவாண்டி சாலையில் தீப்பிடித்து எரிந்த கார்! உடல் கருகி சென்னையை சேர்ந்த 3 பேர் பலி
விழுப்புரம்: விழுப்புரம்- விக்கிரவாண்டி சாலையில் கார் மோதிய விபத்தில் அந்த கார் தீப்பிடித்து சென்னையைச் சேர்ந்த 3 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகில் உள்ள நாகம்மை காட்டன் மில் அருகே சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், சென்னையில் இருந்து 5 பேர் கேரள மாநிலம் மூணாறு சென்றனர். இன்று அதிகாலையில் கார் ஓட்டிநரின் கட்டுப்பாட்டை இழந்தது.

இதனால் சாலையின் மையத்தில் இருந்த தடுப்பில் கார் வேகமாக மோதி, எதிரே வந்த லாரியின் மீதும் மோதியது. இதனால் கார் தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 3 பேர் காரிலேயே சிக்கி உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் அப்துல் அஜீஸ், தீபக் ஆகிய இருவர் படுகாயங்களுடன் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
விபத்தில் கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த சம்சுதீன் (25), ரிஷி, ஆவடியை சேர்ந்த மோகன் ஆகியோர் இறந்தனர். இந்த விபத்து குறித்து விக்கிரவாண்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
டிரைவர் தூக்க கலக்கத்தில் காரை ஓட்டியதே இந்த விபத்துக்கு காரணம் என சொல்லப்படுகிறது. இரவு, அதிகாலை நேரங்களில் வாகனங்களை தூக்க கலக்கத்தில் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும். தூக்கம் வந்தால் வழியிலேயே பாதுகாப்பான இடத்தில் வாகனத்தை நிறுத்தி தூங்கிவிட்டு பிறகு புறப்பட வேண்டும். இதே டிரைவராக இருந்தால் அவரையும் தூங்கவிட்டு வாகனத்தை இயக்க வையுங்கள்.












Click it and Unblock the Notifications