காலை முதல் மாலை வரை நிற்க வைத்த ஜெயிலர்.. திண்டிவனம் சப்ஜெயிலில் காவலர் பாரதி செய்த பகீர்!
விழுப்புரம்: திண்டிவனம் சப் ஜெயிலில் காவலர் பணிச்சுமையால் கையை பிளேடால் கிழித்து கொண்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நல்லியக்கோடன் நகர் பகுதியைச் சேர்ந்த பாரதி மணிகண்டன் என்பவர் திண்டிவனம் சப் ஜெயிலில் காவலராக பணிபுரிந்து வருகிறார்.

இவர் நேற்று காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை ஜெயிலில் நின்றவாறே பணிபுரிந்துள்ளார். திடீரென இரவு பிளேடால் இடது கை மணிக்கட்டில் கிழித்து கொண்டதை கண்ட அருகிலிருந்த காவலர்கள் அவரை மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மருத்துவமனையில் காலையில் 9 மணிக்கு பணிக்கு வந்தால் இரவு 7 மணி வரை நின்று கொண்டே பணி செய்ய வேண்டும் என சப்ஜெயிலரின் உத்தரவால் நின்று கொண்டிருந்ததால் மன உளைச்சல் ஏற்பட்டு பிளேடால் தனது இடது கையின் மணிக்கட்டுப் பகுதியில் கிழித்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றதாக தெரிவித்துள்ளார்.

மேலும் பணி செய்யும் போது அமர்ந்தால் புகார் தெரிவிப்பதாகவும் இதனால் அதிக பணிச்சுமை உள்ளதாகவும் வேதனை தெரிவித்துள்ளார். திண்டிவனம் சப் ஜெயிலில் காவலராகப் பணி புரிபவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணை கைதி தப்பி ஓட்டம் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி












Click it and Unblock the Notifications