திருச்செந்தூர் டூ விழுப்புரம்... திருவண்ணாமலை பேராசிரியரின் காரில் நடந்த சிறு தவறு.. இப்படியா ஆகணும்
விழுப்புரம்: திருவண்ணாமலை நகரைச் சேர்ந்த ஏகாம்பரம் என்பவர் தனியார் பொறியியல் கல்லூரியில் துறை தலைவராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த டிசம்பர் 31ம் தேதி ஆங்கில புத்தாண்டையொட்டி திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு செல்வதற்காக திருவண்ணாமலையில் இருந்து காரில் புறப்பட்டு விழுப்புரம் வந்தார். விழுப்புரத்தில் காரை நிறுத்தி விட்டு சென்று வந்தார். பின்னர்சாமி தரிசனம் முடிந்து வந்தவர் காரில் திருவண்ணாமலை சென்றார் விக்கிரவாண்டி அருகே என்ன நடந்தது என்பதை பார்ப்போம்
நள்ளிரவில் விழுப்புரம் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பயணிப்பதும், விழுப்புரம் செங்கல்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் பயணிப்பதும் சற்று சிக்கலானது. சற்று கவனக்குறைவாக இருந்தாலும் சிக்கலாகிவிடும். விழுப்புரத்தில் நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.

திருவண்ணாமலை கரிகாலன் தெருவை சேர்ந்த 44 வயதாகும் ஏகாம்பரம் என்பவர் திருவண்ணாமலையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் துறை தலைவராக பணியாற்றி வந்தார். பேராசிரியர் ஏகாம்பரம் ஆங்கில புத்தாண்டை யொட்டி கடந்த 31-ந் தேதி திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு செல்ல முடிவு செய்தார். இதற்காக திருவண்ணாமலையில் இருந்து காரில் புறப்பட்டு விழுப்புரம் ரயில் நிலையத்திற்கு வந்துள்ளார்.
பின்னர் காரை அங்குள்ள வாகன நிறுத்தும் இடத்தில் நிறுத்தி விட்டு ஏகாம்பரம் ரயில் ஏறி திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்றுள்ளார். சுவாமிதரிசனம் முடிந்த பின்னர் அவர் அங்கிருந்து ரயிலில் புறப்பட்டு நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு விழுப்புரம் ரயில் நிலையத்துக்கு வந்தார். இதையடுத்து அங்கு நிறுத்தி இருந்த தனது காரை எடுத்துக்கொண்டு பேராசிரியர் ஏகாம்பரம் திருவண்ணாமலை நோக்கி புறப்பட்டு சென்று கொண்டிருந்தார்.
இரவு 9.30 மணியளவில் விழுப்புரம்- திருவண்ணாமலை சாலை கெடாரை அடுத்த மங்களபுரம் அருகே வந்தபோது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடத்தொடங்கியது. ஒரு கட்டத்தில் சாலையோரம் நின்ற புளியமரத்தின் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த ஏகாம்பரம் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து அவரது மனைவி மகேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கோமதி வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்












Click it and Unblock the Notifications