Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இன்று இரவு விஜய் தங்க உள்ள வீடு இதுதானா.. வெளியான முக்கிய தகவல்.. விக்கிரவாண்டியில் நடப்பது என்ன?

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: நடிகர் விஜய் தலைமையில் தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு நாளை (அக்டோபர் 27) விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடக்கிறது. விக்கிரவாண்டியில் மாநாடு நடைபெறும் பகுதியில் தான் இன்று இரவு நடிகர் விஜய் தங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மாநாடு நடைபெறும் இடத்தின் அருகில் உள்ள அந்த இரண்டு வீடுகளையும் வாடகைக்கு எடுத்துள்ளார்களாம். அதன் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.

தமிழ் திரையுலகி உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக உள்ள நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கினார். அந்த கட்சியின் முதல் மாநாட்டை நாளை நடத்துவதாக அறிவித்திருக்கிறார். விஜய் அறிவித்தபடி நாளை மாநாடு விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் நடைபெறுகிறது. இந்த மாநாடு எதற்கு என்றால், நடிகர் விஜய், அரசியல் கட்சி ஆரம்பித்த பின்னர் தொண்டர்களை சந்திப்பதாக தொடங்கப்பட்டது.

tvk maanadu tamilaga vetri kazhagam actor vijay

அதேபோல் முக்கியமான இன்னொரு விஷயம் மாநாட்டில் இருக்கிறது.அதுதான் கொள்கை.. விஜய் கட்சி ஆரம்பித்தாலும், அவரது அரசியல் எப்படி இருக்கும், இடதுசாரியா, வலதுசாரியா, அவரது கட்சியின் கொள்கைள் என்ன என்பதை விளக்கும் திருவிழாவாக நடைபெற போகிறது. விஜய் அரசியல் 2026 சட்டசபை தேர்தலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என அரசியல் கட்சிகள் நம்புகின்றன. 2005ல் விஜயகாந்த் ஆரம்பித்த போது இருந்த எதிர்பார்ப்பு விஜய்க்கு இருப்பதாக அரசியல் நிபுணர்கள் சொல்கிறார்கள்.

எனவே விஜய் எந்த மாதிரியான அரசியலை முன்னெடுக்கப்போகிறார் என்று பலரும் கேள்விகளை வைத்துவருவோருக்கு நாளைய மாநாட்டில் பதில் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. முன்னதாக மாநாட்டு திடலில் இடம் பெற்றுள்ள கட்-அவுட்கள் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. மேடையின் இடது புறத்தில் பெரியார், காமராஜர், அம்பேத்கர், சுதந்திரப் போராட்ட தியாகிகள் வேலு நாச்சியார், கடலூர் மாவட்டத்தை சேர்ந்த அஞ்சலை அம்மாள் ஆகியோரது கட்-அவுட்கள் இடம் பெற்று இருந்தது.

இந்த மாநாட்டு திடலில் 100 அடி உயரமுள்ள கொடிக்கம்பம் 25ம் தேதி அன்று காலை நடப்பட்டது. ராட்சத கிரேன் மூலமாக, தொழிலாளர்கள் இதை அங்கு நிறுவினார்கள். இந்த கம்பத்தில் 20 அடி நீளமும், 30 அடி அகலமும் கொண்ட கொடி நாளை பறக்க விடப்படுகிறது. கயிறு வைத்து இழுத்தும், ரிமோட் மூலமாகவும் இந்த கம்பத்தில் கொடியை ஏற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்த கொடியை நாளை விஜய் தான் ஏற்ற உள்ளார்.

மாநாட்டில் அதிகளவு தொண்டர்கள் கூடுவதால் தொழில்நுட்ப சாதனங்கள் இயங்குவதற்கு ஏற்ற வகையில் தற்காலிக செல்போன் டவர்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதுதவிர 700 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மாநாட்டை பார்க்கும் வகையில் பெரிய டிஜிட்டல் திரைகள் அமைக்கப்பட்டுள்ளது. மாநாடு நடைபெறும் பகுதிகள் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் 350க்கும் மேற்பட்ட நடமாடும் கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து பணிகளும் முடிந்துவிட்ட நிலையில், இன்றே பல தொண்டர்கள் விக்கிரவாண்டிக்கு குவிந்துள்ளனர். பல பெண்கள் ஆர்வமுட்ன் வந்ததை காண முடிந்தது.

இதனிடையே விஜய் ரசிகர்கள் விஜய்யை வரவேற்கும் வகையில் தேசிய நெடுஞ்சாலையில் வாழ்த்து பதாகைகளை வழிநெடுக வைத்திருக்கிறார்கள். சென்னை-திருச்சி சாலையில் விக்கிரவாண்டி முதல் வி.சாலை வரைக்கும் சாலை முழுவதும் வரவேற்பு பதாகைகள் அதிகளவில் இருக்கிறது. இந்த மாநாடு திடல் 85 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாக உருவாக்கப்பட்டு உள்ளது. சுமார் ஒரு லட்சம் பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. நடிகர் விஜய்யை காண பல ரசிகர்கள் வந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில், அவரது பேச்சை கேட்க பலரும் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

நடிகர் விஜய் தங்க உள்ள வீடு: இந்நிலையில் நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழக மாநாடு திடலுக்கு இன்று இரவே வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாநாடு நடைபெறும் பகுதி அருகே உள்ள இரண்டு வீடுகளை இதற்காக வாடகைக்கு எடுத்துள்ளார்களாம்.அந்த வீட்டில் விஜய் தங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. அந்த வீட்டிற்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. விஜய் இரவே வந்து மாநாடுக்கான ஏற்பாடுகளை பார்வையிட போவதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் நாளை மாநாடு நடைபெறும் போது, விஜய், மாநாடு திடலுக்கு உள்ளே தங்குவதற்கு ஏற்ப கேரவன்கள் கொண்டுவரப்பட்டிருக்கிறது. அந்த கேரவனில் இருந்து தான் விஜய் மாநாட்டில் பங்கேற்பார் என்றும் சொல்லப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+