திருட்டு திமுகனு சொன்ன சீமான்.. அவருக்கே ஆதரவு தர்றாங்க! திசை திருப்பும் தலைகள்.. வன்னியரசு ஆதங்கம்

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: திருட்டு திமுக என்று பேசிய சீமானை இன்று திமுக ஆதரிக்கின்றனர் எனவும், நான் கேட்ட கேள்விக்கு திமுகவினர் பதில் சொல்லவில்லை அதனை திசை திருப்பும் வகையில் தான் பேசிட்டு வருகின்றார்கள் என அமைச்சரும், விசிக துணைப் பொதுச் செயலாளருமான வன்னியரசு கூறியுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் அமைந்துள்ள உழவர் சந்தையை தமிழ்நாடு சமூக நீதித்துறை அமைச்சரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளருமான வன்னியரசு ஆய்வு மேற்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்," திண்டிவனம் தொகுதி உட்பட பல்வேறு இடங்களில் மக்களின் தேவைகள், கோரிக்கைகள் குறித்து ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது. நேற்று உழவர் சந்தையில் சாக்கடை தண்ணீர் புகுந்தது குறித்து ஆய்வு கூட்டம் நடத்தி நேரில் பார்வையிட்டோம்.

Vanniyarasu DMK Seeman

வன்னியரசு

உழவர் சந்தையில் சாக்கடை நீர் தேங்குவதை தடுக்க தண்ணீர் செல்லும் பாதைக்கு உடனடியாக ரூ.15 லட்சம் நிதி சாங்ஷன் செய்யப்பட்டுள்ளது. பின்புறம் உள்ள குப்பைகளை அகற்றும் பணி நடைபெறுகிறது. உழவர் சந்தையை நவீனப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கூடுதல் கடைகளுக்கு இடம் உள்ளது, அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. விரைவில் அறிவிப்பு வரும். கூடுதல் கடைகள், நவீன கழிவறைகள், சாலைகள் விரைவில் அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வெள்ள பாதிப்பு

மரக்காணம் பகுதியில் ஐந்து வீடுகள் சேதமடைந்ததாக தகவல் வந்துள்ளது. மாலையில் நேரில் சந்திக்க உள்ளோம். சிறிய பாதிப்பு என்றாலும் உடனடியாக பார்வையிட்டு தீர்வு காணப்படும். மழை முன்னெச்சரிக்கை: மரக்காணம் பகுதியில் எந்தெந்த பகுதிகள் பாதிக்கப்படும் என முன்பே கண்டறிந்து அதிகாரிகள் முடுக்கி விடப்பட்டுள்ளனர். மக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, பதற்றம் தேவையில்லை.

சிறுமி மாயம்

செஞ்சி சிறுமி மாயம் குறித்து, மாவட்ட ஆட்சியர், எஸ்.பி-யிடம் தொடர்ந்து பேசி வருகிறேன். கண்டுபிடித்து தருபவர்களுக்கு ரூ.2 லட்சம் பரிசுத்தொகை தர தயாராக இருக்கிறது. தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தாயின் கண்ணீரை உணர்ந்து தேடுதல் வேட்டை தீவிரமாக நடக்கிறது. கோவை பள்ளி மாணவன் தற்கொலை / சாதிய வன்கொடுமை ஏற்றுக்கொள்ள முடியாதது. தலைவர் திருமாவளவன் அறிக்கை கொடுத்துள்ளார்.

சாதிய பாகுபாடு

பொறுப்பு அமைச்சர், கமிஷனர், ஏடிஜிபி மற்றும் போராட்டக்காரர்களுடன் பேசி வருகிறோம். விரைவில் தீர்வு வரும். பள்ளிகளில் சாதிய பாகுபாட்டை ஒழிக்க ஓய்வுபெற்ற நீதியரசர் சந்துரு கமிட்டி அறிக்கையை நடைமுறைப்படுத்த வேண்டும். கயிறு கட்டுவது போன்ற அடையாளங்களை தவிர்க்கவும், உடற்பயிற்சி பீரியடை அதிகரிக்கவும் அறிவுறுத்தியுள்ளோம்.

நாங்குநேரி சம்பவம்

கோவை சம்பவம் தொடர்பாக தலைவர் அறிக்கை கொடுத்துள்ளார். 3 நாட்களாக விடுதலைச் சிறுத்தைகள் போராட்டக் களத்தில் நிற்கிறோம். வெறும் அறிக்கை அல்ல, மக்களோடு நிற்கும் இயக்கம். நாங்குநேரி சம்பவம் போல் இதையும் தீர்க்க முன்னெடுப்பு எடுத்துள்ளோம். கவின் படுகொலையில் எங்கள் வலியுறுத்தலின் பேரில் தான் கைது நடந்தது. அரசு சட்டப்படி சரி செய்து வருகிறது.

திமுக - சீமான்

'பார்ப்பன கடப்பாரை கொண்டு திராவிட கோட்டையை இடிப்பேன்', 'திருட்டு திமுக' என சீமான் பேசியபோது, கலைஞரை இழிவாக பேசியபோது, பேனாவை உடைப்பேன் என்றபோது திமுகவினர் கண்டிக்கவில்லை. இப்போது மலிவான அரசியல் செய்கின்றனர். ஆரிய திராவிட யுத்தத்தில் ஆரிய கோட்பாட்டை உள்வாங்கிய சீமானை ஆதரிப்பது எந்த விதத்தில் சரி என்பதே எங்கள் கேள்வி. அதற்கு பதில் சொல்லாமல் எங்களை திட்டுவது தான் திமுக நிலைப்பாடா என மக்கள் மன்றத்தில் கேட்கிறேன். எங்களை போன்ற ஏழை எளியவர்கள் தான் இன்று அமைச்சராக இருக்கிறோம். ஆ.ராசா போன்ற வசதி படைத்த மிட்டா மிராசுகள் இல்லை. அவர் பேசுவது நகைச்சுவையாக உள்ளது" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+