ரேம்பில் செல்போனை தூக்கி வீசிய தொண்டர்.. டக்கென விஜய் செய்த காரியம்! ஆர்ப்பரித்த தொண்டர்கள்
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு பிரமாண்டமாக நடந்து வருகிறது. மாநாட்டில் உற்சாகத்துடன் என்ட்ரி தந்த விஜய் ரேம்பில் தொண்டர்களை நோக்கி கையசைத்தபடி வாக் சென்றார். அப்போது தொண்டர் ஒருவர் துண்டோடு செல்போனை சேர்த்து வீசினார். இதில் கீழே விழுந்த செல்போனை மீண்டும் தொண்டரிடம் விஜய் கொடுத்தார். இதனால் தொண்டர்கள் ஆர்ப்பரித்தனர்.
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியில் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்க தமிழகம் முழுவதிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டுள்ளனர். மாநாட்டு திடல் பகுதிக்கு நேற்றில் இருந்தே தொண்டர்கள் குவியத்தொடங்கிய நிலையில், காலை 9 மணியளவில் இருந்து திடலுக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

85 ஏக்கர் பரப்பளவில் நடைபெறும் விஜய் கட்சி மாநாட்டு திடல் முழுவதும் தொண்டர்கள் கூட்டம் நிரம்பி வழிந்துள்ளது. சரியாக 4 மணிக்கு மாநாடு மேடைக்கு வந்த விஜய், சுமார் 600 மீட்டர் தொலைவில் அமைக்கப்பட்டுள்ள ரேம்பில் நடந்து சென்றார். அப்போது, தொண்டர்கள் கட்சி துண்டை விஜய்யை நோக்கி வீசினர்.
அந்த துண்டை எடுத்து தனது கழுத்தில் விஜய் அணிந்து கொண்டார். மிகவும் உற்சாகமாக காணப்பட்ட விஜய், ரேம்பில் ஓட்டமும் நடையுமாக சென்றார். வரிசையாக தொண்டர்கள் அவரை நோக்கி கட்சி துண்டை வீசிக்கொண்டே இருந்தனர். தொண்டர்களை பார்த்து உற்சாகமாக கை அசைத்த படி வந்தார்.
அப்போது தொண்டர் ஒருவர் ஆர்வ மிகுதியில் செல்போனை தூக்கி எறிந்துவிட்டார். இதைக் கவனித்த விஜய் உடனே ஓடிச்சென்று செல்போனை எடுத்து அந்த தொண்டருக்கே கிடைக்கும் படி தூக்கி வீசினர். இதைப்பார்த்த கட்சி தொண்டர்கள் ஆர்ப்பரித்தனர். விஜய்.. விஜய்.. என ஆர்ப்பரித்தனர்.












Click it and Unblock the Notifications