விஜயகாந்த் நல்லவர்… அவரை நான் விமர்சிக்க மாட்டேன்… உதயநிதி ஸ்டாலின் உருக்கம்

Subscribe to Oneindia Tamil

கள்ளக்குறிச்சி: விஜயகாந்த் நல்லவர் என்றும் அவரை நான் விமர்சிக்க மாட்டேன் எனவும் உதயநிதி ஸ்டாலின் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகன் கவுதம சிகாமணி போட்டியிடுகிறார்.

Vijayakanth is good; I will not criticize him... Udhayanidhi Stalin campaign

அவருக்கு ஆதரவாக கள்ளக்குறிச்சி நான்குமுனை சந்திப்பில் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, பிரதமர் மோடி கடந்த 5 ஆண்டுகளில் 52 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ளார். இதற்கான செலவு மட்டும் ரூ.2,500 கோடி என்றார்.

தமிழகத்தில் கஜா புயல், வர்தா புயல், ஒக்கி புயல் தாக்கிய போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க பணம் இல்லை என்ற மோடி, குஜாராத்தில் ரூ.3,000 கோடியில் உலகிலேயே பெரிய சிலை அமைத்தார். அதனால் மக்களுக்கு ஏதாவது பயன் உண்டா? என்று கேள்வி எழுப்பினார்.

கடந்த தேர்தலில் மோடி அலை வீசியது என்றனர். ஆனால் தற்போதைய தேர்தலில் மோடி எதிர்ப்பு அலை வீசுகிறது. தமிழகத்தில் ஸ்டாலின் அலை வீசுவதாகவும் கூறினார்

விஜயகாந்த் மீது நான் மதிப்பு மரியாதை வைத்துள்ளேன். அவர் நல்லவர். அவரை பற்றி விமர்சிக்க விரும்பவில்லை என்றும் பேசினார். அதே நேரத்தில் அவருடன் இருப்பவர்கள் செய்வது கேவலமாக உள்ளதாகவும் தெரிவித்தார்.

[முக்கிய வேட்பாளர்களின் களம்.. பெரிய கட்சிகளின் டார்கெட்.. சென்னை மத்திய தொகுதியின் சிறப்பம்சம்!]

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+